புஷ்ஷுக்கு அல்-கொய்தா கடும் எச்சரிக்கை
வாஷிங்டன்:இராக்குக்கு கூடுதல் படைகளை அனுப்ப புஷ் முயன்றால் இதுவரை பெற்றிராதஅடியை, கடுமையான தாக்குதலை அமெரிக்காவும், அதன் வீரர்களும் சந்திக்கநேரிடும் என அல்கொய்தா அமைப்பின் 2ம் நிலை தலைவரும் ஒசாமா பின்லேடனின் வலது கரமுமான ஐமான் அல் ஜவாஹிரி எச்சரித்துள்ளார்.
லேடனும், ஜவாஹிரியும் எங்குள்ளனர் என்று தெரியாமல் அமெரிக்கா தவித்து வரும்நிலையில் புதிய வீடியோவை அல்-கொய்தா வெளியிட்டுள்ளது.
![]() |
சுமார் 14 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோ காட்சியில் அமெரிக்காவையும்,புஷ்ஷையும் ஜவாஹிரி கடுமையாக எச்சரித்துப் பேசியுள்ளார். அதில்,
நாங்கள் பாதுகாப்பாக இருந்தால், நீங்களும் பாதுகாப்பாக இருப்பீர்கள். எங்களுக்குஆபத்து இல்லை என்றால் உங்களுக்கும் ஆபத்து இல்லை. நாங்கள் தாக்கப்பட்டால்,கொல்லப்பட்டால், அல்லாவின் அனுமதியுடன், நீங்களும் தாக்கப்படுவீர்கள்,கொல்லப்படுவீர்கள்.
ஈராக்குக்கு 20 ஆயிரம் கூடுதல் துருப்புகளை ஏன் அனுப்புகிறீர்கள்? 50 ஆயிரம், 1லட்சம் என அனுப்ப வேண்டியதுதானே.? இராக்கில் உள்ள நாய்கள், உங்களதுவீரர்களின் ரத்தத்தைப் புசிக்க பசியோடு காத்திருப்பது உங்களுக்குத் தெரியாதா?
உங்களது மொத்த ராணுவத்தையும் இராக்குக்கு அனுப்புங்கள். அவர்களை வதம்செய்ய முஜாஹிதீன்கள் ஆயத்தமாக உள்ளனர். உங்களைப் போன்ற தீயசக்திகளிடமிருந்து உலகத்தை விடுவிக்க அவர்கள் காத்திருக்கிறார்கள்.
உங்களைப் போல பத்து மடங்கு ராணுவ வீரர்களை கொன்று புதைக்க இராக்கில்நிறையவே இடம் இருக்கிறது. இராக் தியாக பூமி. கடவுளின் உதவியுடனும்,சக்தியுடனும் உங்களை கொன்று புதைப்போம்.
ஆப்கானிஸ்தானோடு அல் கொய்தா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அசிங்கமான ஒருபொய்யைக் கூறியுள்ளார் புஷ். உண்மை நிலையை அமெரிக்கர்கள் புரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் பாதுகாப்பாக வாழ விரும்பினால் புஷ் அவிழ்த்து விடும்இதுபோன்ற கட்டுக் கதைகளை நம்பக் கூடாது.
முஸ்லீம்களுடன் சமரசத்திற்கு இறங்கி வாருங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.அப்போதுதான் உங்களால் பாதுகாப்பாக, அச்சமின்றி வாழ முடியும். புஷ்ஷைப்பின்பற்றி நீங்கள் நடந்தால் ஒட்டுமொத்தமாக நீங்கள் அமைதியின்றி வாழ நேரிடும்.
அமெரிக்க சிறைகளில் வாடும் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஷேக் ஓமர் அப்துல்ரஹ்மானை விடுவிக்க வேண்டும். மற்ற அல் கொய்தாவினரையும் விடுவிக்கவேண்டும். ஷேக் உமருக்கு ஏதாவது நேர்ந்தால், அமெரிக்காவில் இதுவரை இல்லாதஅளவுக்கு மிகப் பெ>ய தாக்குதல் தொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜவாஹிரி.
ஷேக் ஓமர் அப்துல் ரஹ்மான் 1993ம் ஆண்டு நடந்த உலக வர்த்தக மையகுண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக 1995ம் ஆண்டு கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டார். கண் பார்வை இழந்த அவர் தற்போது அமெரிக்கசிறையில் உயிருக்குப் போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் தாக்குதல் பீதி:
இதற்கிடையே அல்கொய்தா அமைப்பு அமெரிக்காவின் மீது கடும் தாக்குதலைநடத்தலாம் என அந்நாட்டு புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ எச்சரித்துள்ளது.
ஆறு மாதங்களுக்கு முன்பு இதுதொடர்பான சில முக்கிய ஆவணங்களை ஈராக்கில்அமெரிக்க அதிகாரிகள் கைப்பற்றினர். அதில் அமெரிக்க மண்ணில் மிகப் பெரும்தாக்குதலை நடத்தும் அல் கொய்தாவின் திட்டம் இடம் பெற்றிருந்தது.
மாணவர்கள் என்ற போர்வையில் மாணவர் விசா பெற்று அமெரிக்காவில் நுழைந்துதாக்குதல் நடத்த அல் கொய்தா அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் தீவிரவாத தாக்குதலைநடத்தியவர்களில் 2 பேர்தான் இந்த சதியை செயல்படுத்த அனுப்பப்பட்டுள்ளதாகவும்அமெரிக்க அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.
அமெரிக்காவில் எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்பது குறித்துதீவிரவாதிகள் தெளிவாக குறிப்பிடவில்லை. எனவே அவர்கள் இன்னும் இலக்கைதீர்மானிக்கவில்லை என எப்.பி.ஐ. கருதுகிறது.













Click it and Unblock the Notifications