சென்னையில் நூதன கொள்ளை கும்பல் கைது!
சென்னை:பைக்குகளில் செல்பவர்களை வழிமறித்து கொள்ளையடித்து வந்த 10 பேர் கொண்ட கும்பலை போலீஸார்பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டன.
![]() |
சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நூதன முறையில் வழிப்பறி செய்யும் கும்பல்கள் பெருகி விட்டன.இந்தக் கும்பலின் குறியே மோட்டார் சைக்கிளில் தனியாக செல்வோர்தான்.
திடீரென்று நம்மை நிறுத்தி டயரில் காற்று வீக்காக இருப்பது போல தெரிகிறது, ஆயில் ஒழுகுகிறது என்பதுஉள்ளிட்டவற்றை சொல்லி நமது கவனத்தை திசை திருப்புவது இவர்களது தொழில் உத்தி.
வாகனத்தை ஓட்டி வருபவர் குழப்பமாவதைப் பயன்படுத்தி செல்போனையோ அல்லது வைத்திருக்கும்பொருட்களை பறித்துக் கொண்டு இந்தக் கும்பல் தப்பி விடும். இப்படிப்பட்ட திருட்டுத்தனத்தை செய்து வந்த 10பேர் கொண்ட கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர்.
தென் சென்னை காவல் இணை ஆணையர் துரைராஜ் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார்இந்தக் கும்பலைப் பிடித்தனர். இவர்களில் கோவிந்தன், சுதா, தமீம், கார்த்திக், ஜமால் ஆகியோர்தேனாம்பேட்டை, மாம்பலம், பாண்டி பஜார், நுங்கம்பாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் பிடிபட்டனர்.
இவர்களிடமிருந்து 10 மோதிரங்கள், 5 தங்கச் சங்கிலிகள், 9 செல்போன்கள், 11 ஆயிரத்து 100 ரூபாய் பணம், 1கைக்கடிகாரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல திருட்டுக் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த தினகர், செந்தில்குமாரையும் போலீஸார்பிடித்தனர். 2 மாருதி கார்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், 3 பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கீழ்ப்பாக்கம் பகுதியில் டேனியல், சுதிர், சேகர் ஆகிய 3 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்தும் நகைகள், பணம்பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பத்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 15 லட்சம் ஆகும்.
இவர்களில் செந்தில்குமார், கோவிந்தராஜ், ஜமால் ஆகியோர் ஏற்கனவே 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்கைதாகி உள்ளே சென்றவர்கள். சுதாகர் ஒரு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications