சேது: ராமர் பாலத்தை உடைத்த கப்பல் சேதம்
ராமேஸ்வரம்:சேது சமுத்திரத் திட்ட கடல் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த கப்பல், ராமர் பாலம் தீவித் திட்டுகளை உடைத்துக்கொண்டிருந்தபோது அதன் கருவி உடைந்ததால் கடலை ஆழப்படுத்தும் பணியில் பெரும் பாதிப்புஏற்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கி, கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.பாக் ஜலசந்தியில் 167 கிலோமீட்டர் தொலைவுக்கு கடலை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது வேதாரண்யம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதியில் அகழ்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காகஅதி நவீன சிஎஸ்டி அக்வாரியஸ் மற்றும் டிரஜ் 6 என்ற இரு கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
டிசம்பர் 10ம் தேதி முதல் இப்பகுதியில் ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. முக்கியப் பகுதியான ராமர் பாலம்அல்லது ஆதாம் பாலம் (தீவுத் திட்டுக்கள்) பகுதியில் ஆழப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.
ஆனால், இந்தப் பாலம் இலங்கை செல்வதற்காக ராமர் கட்டிய பாலம் என இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால்இந்தப் பாலத்தை இடிக்கக் கூடாது, அப்படி செய்தால் அது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என பாஜக,இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள் கோரி வந்தன.
இந் நிலையில் நேற்று முதல் முறையாக ராமர் பால தீவுத் திட்டுகளை உடைக்கும் பணி தொடங்கியது. ஆனால்எதிர்பாராதவிதமாக பாலத்தை உடைக்கப் பயன்படுத்தப்பட்ட கருவி சேதமடைந்தது.
தோண்டும் கருவியில் இருந்த 50 டன் எடை கொண்ட பகுதி அப்படியே துண்டித்து கடலுக்குள் போய் விட்டது.இதனால் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. அந்தக் கருவியை கண்டுபிடித்து எடுக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக கிரேனுடன் கூடிய பெரிய கப்பல் ஒன்று சென்னையிலிருந்து விரைந்துள்ளது. இக்கப்பலுடன் 40க்கும்மேற்பட்ட நிபுணர்களும் வந்துள்ளனர். இவர்கள் கடலில் மூழ்கிய பகுதியை கண்டுபிடித்து எடுத்து சரி செய்யும்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ரிப்பேரை செய்ய ரூ. 2 கோடி செலவாகுமாம். சரி செய்யும் பணி விரைவில் முடிவடைய வாய்ப்பில்லைஎன்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications