கருணாநிதி தரம் தாழ்ந்துவிட்டார்- விஜயகாந்த்
கருணாநிதிக்கு பொன் விழா எடுத்த எனக்கு, வருமான வரி சோதனை மூலம் நல்லகைமாறு செய்து விட்டார் என்று குமுறியுள்ளார் தேமுதிக தலைவரும், நடிகருமானவிஜயகாந்த்.
சென்னை, மதுரையில் உள்ள விஜயகாந்த்தின் வீடுகள், உறவினர் வீடுகள்,அலுவலகங்கள், ரைஸ் மில், தேமுதிக கட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றில் நேற்றுவருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனை நடந்தது.
![]() |
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வருமான வரி சோதனை நடத்த அதிகாரிகள்வந்தபோது, வீட்டில் விஜயகாந்த் இருந்தார். உள்ளே நுழைந்த அதிகாரிகள் வீட்டுக்கதவை மூடிக் கொண்டனர். விஜயகாந்த்தை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.
![]() |
மாலையில் சோதனை முடிந்த பின்னர் தான் விஜயகாந்த் வெளியே வந்தார். அப்போதுஅங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் விஜயகாந்த்துக்கு ஆதரவாககுரல் எழுப்பினர்
பின்னர் வீட்டுக்குள் சென்ற விஜயகாந்த் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அவர்கூறுகையில்,
![]() |
இந்த அச்சுறுத்தலுக்கு நான் பயப்பட மாட்டேன். இது அரசியல் ரீதியாக பழிவாங்கும்நடவடிக்கை. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடக்கவில்லை என்று காட்டுவதற்காககத் தான் ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய (ஜேப்பியார்?) சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர். எல்லாவற்றையும்மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
![]() |
கருணாநிதி இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை.
என்னை திமுக கூட்டணிக்கு இழுக்கவே இந்த சோதனை நடந்துள்ளது. தமிழ்நாட்டில் எந்த பெரிய கட்சியுடனும்கூட்டணி வைக்க மாட்டோம். தனித்தே போட்டியிடுவோம்.
கருணாநிதிக்கு முன்பு நான் பொன் விழா நடத்தினேன். அப்போது என்னைக்கூப்பிட்ட அவர், தம்பி விழாவை சிறப்பாக நடத்தினாய். இதற்கு உனக்கு நான் என்னகைமாறு செய்யப் போகிறேன் எனத் தெ>யவில்லை என்றார்.
இப்போது இந்த வருமான வரி சோதனை மூலமாக அந்தக் கைமாறை அவர் செய்துவிட்டார்.
கல்யாண மண்டப விவகாரத்தில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் கோபமாகி, அதை திசைதிருப்ப இப்படி ஒரு சோதனையை ஏவி விட்டுள்ளார்கள்.
இந்த சோதனையில் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால்கோடிக்கணக்கில் ஆவணங்கள் சிக்கி விட்டதாக செய்தி பரப்புகிறார்கள்.
சோதனைக்கு வந்த அதிகாரிகள் ஒன்றும் கிடைக்காததால், யார் யாரிடமோ போனில்பேசிக் கொண்டிருந்தார்கள். எந்த மேலிடத்தில் பேசினார்கள் என்று தெரியவில்லை.
நான் வருமான வரியை முறையாக கட்டுபவன். எனவே இந்த அச்சுறுத்தல் வேலைஎன்னிடம் பலிக்காது. கட்சியை கலைத்து விட்டு ஓடி விட மாட்டேன். என் சொத்தேஅழிந்தாலும் பரவாயில்லை. மக்கள்தான் எனக்கு தெய்வம். அவர்கள் நடப்பதைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஊழல் செய்த அமைச்சர்கள் வீட்டில் இப்படி ஏதாவது சோதனை நடத்தினார்களா?.ஊழல் செய்து சம்பாதித்தவர்கள் வீட்டைக் கண்டுகொள்ள மாட்டார்கள். உழைத்துசம்பாதித்தவன் வீட்டில்தான் சோதனை நடத்துவார்கள்.
என்னை (நேற்று) சட்டசபைக்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டனர். இதை உரிமைமீறல் பிரச்சினையாக சட்டசபையில் எழுப்புவேன் என்றார்.
முன்னதாக வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது வீட்டுக்கு வெளியேதொண்டர்களோடு காத்திருந்த கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுவரை எந்த அரசியல் கட்சியின் தலைமைஅலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது கிடையாது.
ஆனால் தேமுதிக தலைமை அலுவலகத்தைப் பூட்டி விட்டு சோதனைநடத்தியுள்ளனர். மேலும் சில இடங்களில் சோதனை நடந்திருந்தாலும், இந்தசோதனையே விஜயகாந்த்தைக் குறி வைத்துத்தான் நடந்துள்ளது.
விஜயகாந்த்தின் உறவினர்கள் அத்தனை பேர் வீடுகளிலும் சோதனை நடத்தியுள்ளனர்.இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்றார் பண்ருட்டிராமச்சந்திரன்.
அரசு கார்கள் சேதம் தப்பில்லை: விஜய்காந்த்
வருமான வரித்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த விஜய்காந்திந் ரசிகர்கள் அதிகாரிகளின் அரசு கார்களை உடைத்துசேதப்படுத்தினர். காற்றை பிடுங்கிவிட்டு ரெளடித்தனம் செய்தனர். இதையடுத்து அவர்களில் ஓவர் ஆட்டம் போட்ட சிலரை போலீசார் பிடித்துச் சென்றனர்.
அரசுப் பணியில் ஈடுபட வந்த அதிகாரிகளின் அரசு கார்களை ரசிகர்கள் சேதப்படுத்தியது சரியா என்று விஜய்காந்திடம் நிருபர்கள் கேட்டபோது,
இது ஒண்ணும் தப்பில்ல. ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டுருக்காங்க. அவங்களால பக்கத்து வீட்டுக்குக் கூட பிரச்சனை இல்ல. ஆனாலும் அவுங்கள அரெஸ்ட்பண்ணியிருக்காங்க. அவுங்களை ரிலீஸ் பண்ணாட்டி உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்
















Click it and Unblock the Notifications