நாளை முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
ஆட்டோ கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. ஜனவரி 26ம் தேதி முதல் இது அமலுக்குவரும் எனவும் அறிவித்தது.
அதன்படி நாளை முதல் ஆட்டோ கட்டணம் உயர்கிறது. புதிய விகிதப்படி முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ. 14 கட்டணமாகவசூலிக்கப்படும். அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ. 6 கூடுதலாக வசூலிக்கப்படும்.
இரவு நேர பயணத்தின்போது வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கூடுதலாக 25 சதவீதம் வசூலிக்கப்படும்.
தற்போதுள்ள மீட்டர்களை எலக்ட்ரானிக் மீட்டர்களாக மாற்ற 6 மாத காலக் கெடுவை ஆட்டோ உரிமையாளர்களுக்கு அரசுநிர்ணயித்துள்ளது. மேலும் தற்போதுள்ள எலக்ட்ரானிக் மீட்டர்களில் புதிய கட்டண விகிதத்தை மாற்றவும் அரசு கால அவகாசம்கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications