ஆட்சியில் பங்கு: 2 முறை கேட்டாச்சு-மொய்லி
சென்னை:ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரசின் விருப்பத்தை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இருமுறைசொல்லி விட்டோம். ஆனால், இனியும் அது குறித்துப் பேசி திமுகவுக்கு தர்மசங்கடத்தை உருவாக்க மாட்டோம்என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி கூறினார்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும், தங்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் எனகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க் கொடி தூக்கியுள்ளனர். ஒரு பக்கம் பாமக தரப்பில் இருந்து எதிர்க் கட்சிரேஞ்சுக்கு நெருக்கடிகள் ஆரம்பித்துவிட்டன.
இதனால் வேறு வழியின்றி கூட்டணி ஆட்சிக்கு திமுகவும் தயாராகி வருவதாக செய்திகள் வந்தன. இந் நிலையில்தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் வீரப்ப மொய்லி நேற்று சென்னை வந்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விருந்தினர் இல்லத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள்கூட்டத்தில் அவர் பேசினார்.
அதற்கு முன் நிருபர்களிடம் மொய்லி பேசுகையில்,
இது வழக்கமான சந்திப்பு தான். திமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே நல்லுறவு உள்ளது. தமிழக சட்டசபைத்தேர்தலின் போது நாங்கள் கருணாநிதியுடன் பேசிய போது ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. தொகுதி ஒதுக்கீடுமட்டும் பற்றித் தான் பேசினோம்.
சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில்பங்கேற்கும் விருப்பம் இருந்தது. அதில் காங்கிரஸ் கட்சியும் ஒன்று. எங்கள் விருப்பத்தை தமிழக முதல்வர்கருணாநிதியிடம் இருமுறை சொல்லி விட்டோம்.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அவர்களின் விருப்பத்தை சட்டசபையிலும் தெரிவித்தனர்.
ஆனால் இதற்கு மேலும் கூட்டணி ஆட்சி குறித்து கருணாநிதியுடன் பேசமாட்டேன். திமுகவுக்கு தர்மசங்கடநிலையை உருவாக்க மாட்டேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு வலியுறுத்த மாட்டோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி வர வேண்டும் என்று ஆசையிருக்கிறது. இது எல்லா கட்சிகளுக்கும் இருக்கும்ஆசை தான். தேசிய கட்சி என்பதால் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது.
தமிழகத்தில் 40 சதவீதம் அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்புவதற்கு திட்டம் வகுப்போம் என்றார்மொய்லி.
இதையடுத்து நடந்த எம்எல்ஏக்களுடனான சந்திப்பில் ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைவலுவாகவே இருந்தது. ஆனால், இது குறித்து சோனியாவும் கருணாநிதியும் தான் முடிவு செய்ய வேண்டும். நாம்ஏதும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டு மொய்லி எஸ்கேப் ஆனார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications