5 வருடமாக நடந்த ஆயுத கடத்தல்!
சென்னை:தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடந்த ஐந்து வருடங்களாக ஆயுத உதிரி பாக கடத்தல் நடந்து வந்துள்ளதுகியூ பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் மானாமதுரை அருகே விடுதலைப் புலிகளுக்கு அனுப்பப்படவிருந்த ஆயுதங்களை போலீஸார்பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின்போது ஒரு செல்போன் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்துஅந்த செல்போனுக்கு வரும் அழைப்புகள் உள்ளிட்டவற்றை போலீஸார் கண்காணித்து வந்தனர்.
அப்போது, மும்பையிலிருந்து லாரி மூலம் ஆயுத உதிரிபாகங்கள் (பால் பியரிங்குகள்) சென்னைக்கு கொண்டுவரப்படுவதாக 2 நாட்களுக்கு முன்பு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் உஷாராயினர்.
கியூ பிரிவு எஸ்.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில்ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியமேடு அருகே வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அந்தலாரியில், 2000 கிலோ எடை கொண்ட 40 மூடை பால் பிய>ங்குகள் இருந்தன.
இந்த பால் பியரிங்குகளைக் கொண்டு கண்ணிவெடிகள், துப்பாக்கிக் குண்டுகளை தயாரிக்க முடியும்.இதையடுத்து மினி லாரியிலிருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இலங்கையைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம்போலீஸார் விசாரணை நடத்தியபோது தூத்துக்குடியில் உள்ள பிரபாகரன் என்பவரது வீட்டிலும் இதுபோல பால்பியரிங் மூட்டைகள் இலங்கைக்கு அனுப்ப காத்திருப்பதாக தெரிய வந்தது.
உடனடியாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸார் உஷார்படுத்தப்பட்டு பிரபாகரன் வீட்டில் சோதனைநடத்தப்பட்டது. பிரபாகரன் வீட்டில் 60 மூட்டை பால் பியரிங் மூட்டைகள் சிக்கின. அவரும் கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பாக இதுவரை சதீஷ், செல்வசேந்தன், யோகராஜா, பாரதி என்கிற பாரதிதாசன், சிவா, ஜெயவேலு,ராஜேத் அகமது, மயில்வாகணன், பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்னும் ஒருவர் தூத்துக்குடி போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது. அவரையும் பிடிக்கபோலீஸார் தீவிர வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
சென்னையில் கைதான 9 பேரிடமிருந்தும் ஒரு டாடா இண்டிகா கார், ரூ. 5 லட்சம் பணம், 3 செல்போன்கள், மினிலாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அனைவரும் நேற்று இரவு சென்னை எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 5 இலங்கைத் தமிழர்களும் விடுதலைப் புலிகள் அல்ல என்றும் புலிகள் அமைப்பின்அனுதாபிகள் எனவும் கியூ பிரிவு எஸ்.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம் கூறியுள்ளார்.
ஆயுத உதி> பாகங்கள் பிடிபட்டுள்ளதைத் தொடர்ந்து ராமநாதபுரம், தூத்துக்குடி இலங்கையை ஒட்டியுள்ளகடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications