பாமக பொறுப்புள்ள எதிர்க் கட்சி: ராமதாஸ்
புதுக்கோட்டை:தமிழகத்தில் பொறுப்புள்ள எதிர்க் கட்சியாக செயல்படுவோம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
திமுகவுக்கு எதிராக அவ்வப்போது குண்டைப் போட்டு வருகிறார் ராமதாஸ். இதனால் அவர் அணி மாறதயாராகிவிட்டதாக திமுக கருத ஆரம்பித்துள்ளது. இந் நிலையில் புதுக்கோட்டையில் நிருபர்களிடம் பேசியஅவர்,
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 5ம் தேதி வெளியாகவுள்ளது. நல்ல தீர்ப்பு வரும் எனநம்புவோம். தீர்ப்பு வந்த பின் அதை மத்திய அரசு கெஜெட்டில் வெளியிட வேண்டும். அப்போது தான் அதைசட்டரீதியாக அமலாக்க முடியும்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே தமிழகத்தின் உரிமைகளை பறிகொடுத்துவிட்டோம். காவிரி பிரச்சனையில்அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் பேச வேண்டும்.
காலத்துக்கு ஏற்ப அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என கவர்னர் உரையில் தமிழக அரசு அறிவித்துள்ளதுசரியே. ஹெல்மட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். இதனால் பலரது உயிர்களை காப்பாற்ற முடியும்.
தேர்தலுக்கு முன்பே கூறியதைப் போல திமுக ஆட்சியில் பங்கு கேட்கவே மாட்டோம். எதிர்க் கட்சியாக,பொறுப்புடன், தோழமையுடன் செயல்படுவோம் என்றார் ராமதாஸ்.
முன்னதாக பேராவூரணியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தில் தர்மபுரி, விழுப்புரம்,புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் தொடர்ந்து மிகவும் பின் தங்கியுள்ளன.
இந்தப் பகுதிகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பு திட்டங்கள் போடப்பட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு,தொழில் முதலீட்டில் இந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
தமிழகத்தில் விவசாயிகள் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. இந்த அரசு விவசாயிகளுக்கு உதவும் என்றுநம்புகிறேன் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications