என்னை ஒழிக்க திமுக சதி-விஜய்காந்த் பாய்ச்சல்
சென்னை:என்னை ஒழித்துக் கட்ட சதி நடக்கிறது, அதன் ஒரு பகுதியாகவே வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளதுஎன தேமுதிக தவைரும் நடிகருமான விஜய்காந்த் கூறியுள்ளார்.
ரெய்டுகளைத் தொடர்ந்து இன்று தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் அவசரஆலோசனையில் ஈடுபட்டார் விஜயகாந்த். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
திமுக என்னை ஒழித்துக் கட்ட நினைக்கிறது. எனது திருமண மண்டபத்தை இடிப்பதை எதிர்த்து நான் வழக்குதொடர்ந்தேன். அந்த ஆத்திரத்தில்தான் இந்த சோதனையை ஏவி விட்டுள்ளனர். என் வீடு, கட்சி அலுவலகம்மற்றும் என் உறவினர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கொண்டது.
இதில் உள்நோக்கம் இல்லை என்று மத்திய மந்திரி பழனி மாணிக்கம் கூறுகிறார். ஆனால் அரசியல் உள்நோக்கம்இருக்கிறது. திட்டமிட்ட சதி இருக்கிறது. இல்லையென்றால் பழனிமாணிக்கம் இன்று ஏன் பேட்டி தர வேண்டும்?அவரை இயக்குவது அவரது தலைவர்தான். பழனி மாணிக்கம் வெறும் பொம்மை தான்.
நான் இதுவரை முறையாக வரி கட்டி வருகிறேன். தஞ்சாவூரிலிருந்து வந்தவர்கள் எல்லாம் வருமான வரிகணக்கை காட்டியிருக்கிறார்களா? இதுவரை சொத்து வரி கட்டியிருக்கிறார்களா.? அமைச்சராக இருக்கும்பழனிமாணிக்கம் தனது சொத்துக் கணக்கை காட்டியிருப்பாரா?.
தேர்தலில் போட்டியிட்டபோது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கிய தொகையை குறிப்பிட்டு கணக்குகாட்டியிருந்தேன். ஆனால் இப்போதைய மார்க்கெட் நிலவரப்படி உள்ள விலையை வருமான வரித்துறையினர்கூறுகிறார்கள் (இப்போதையை விலையைத் தானே காட்டியிருக்க வேண்டும்?)
என் வீட்டில் சோதனை நடந்தபோது வருமான வரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தந்தேன். இதைஅவர்களிடம் கேட்டாலே சொல்வார்கள். கல்லூரி தொடர்பாகத்தான் வருமான வரி சோதனை என்றால் என்வீட்டின் கதவை காலை 6.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் தட்டும்போது கூடவே சன்டிவிக்காரர்களும் வந்து எப்படி படம் பிடித்தார்கள்?.
வருமான வரித்துறையினர் வரும் முன்பே என் கட்சி அலுவலகத்தில் போலீஸை குவித்தது எப்படி? வீட்டில்சோதனை நடந்து கொண்டிருந்தபோதே பல கோடி ரூபாய் சிக்கியதாக அந்த ஒரு தொலைக்காட்சியில் மட்டும்செய்தி வெளியிட்டது எப்படி?
நான் வரி தொடர்பான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யவில்லை என்கிறார்கள். நான் எல்லாவற்றையும் முறையாகதாக்கல் செய்து கொண்டு தான் இருக்கிறேன். இது பற்றி மேலும் விளக்கமாக பதில் சொல்ல கால அவகாசம்கேட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளேன். என் என்ஜினியரிங் கல்லூரியில் சோதனை போட்டனர். எனக்கு ரூ. 7கோடி கடன் இருக்கிறது என்பதற்கு உரிய ஆவணங்களுடன் வாக்குமூலம் தந்துள்ளேன். அதை வருமான வரிஅதிகாரிகள் வெளியில் சொல்லாதது ஏன்?
கோடிக்கணக்கில் பணம் சிக்கும் என அவர்கள் நினைத்தனர். ஆனால், ஏதும் கிடைக்காததால் வேண்டுமென்றேஏதேதோ சொல்கிறார்கள். இந்த சோதனைக்காக வருமான வரித்துறையினர் ஏவி விடப்பட்டுள்ளனர். அவர்கள்பாவம் என்ன செய்வார்கள்?
தேமுகதிகவை அழித்துவிட சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். ஆனால், அவர்களால் ஏதும் செய்ய முடியாது.
என்னுடையை மொத்த சொத்து போனாலும் பரவாயில்லை முதல்வரின் ஓட்டையை அடைப்பேன். அவரதுவேட்டை தொடர்ந்தால் நாங்கள் கோட்டைக்கு செல்வது நிச்சயம். (சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசியமுதல்வர் கருணாநிதி, அடைக்க வேண்டிய ஓட்டைகளை அடைத்து, நடத்த வேண்டியவேட்டையை வெற்றிகரமாக நடத்தி, இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழைவளர்ப்போம் என்று பேசியிருந்தார். இதில் வேட்டையை என்ற வார்த்தையை தன்வீட்டில் நடந்த ரெய்டை குறிப்பிட்டுத் தான் கருணாநிதி சொன்தாக விஜய்காந்த்நினைக்கிறார்)
எங்கள் கட்சி அலுவலகத்திலும் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். எனது எம்எல்ஏ ஹாஸ்டல் ரூமிலும்சோதனை போட்டுள்ளனர். இதற்கெல்லாம் என்னிடம் எந்த கையெழுத்தும் வாங்கவில்லை. அங்கிருந்துஎன்னென்ன எடுக்கப்பட்டது என்ற விபரமும் எனக்கு இதுவரை தெரியவில்லை.
என்னை மட்டுமின்றி என் குடும்பத்தைப் பற்றியும் அந்த தொலைக்காட்சியில் தேவையில்லாமல் காட்டுகிறார்கள்.இதன்மூலம் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி பெயரை கெடுக்க நினைக்கிறார்கள். எனக்கு கோடிகள்முக்கியமல்ல, கோடிக்கணக்கான தமிழர்களின் இதயங்கள் என்னுடன் உள்ளன.
இந்த பிரச்சனை பற்றி சட்டசபையில் பேசி எந்த பயனும் இல்லை. இதை மக்கள் மன்றத்தில் பேசுவேன்.
இன்று வரை நான் முறையாக வருமான வரி கட்டி வருகிறேன். எனது சொத்து முழுவதையும் கூட அவர்கள்எடுத்துக் கொள்ளட்டும். நான் தயார். ஆனால் பூமாலை பத்திரிக்கை நடத்தியதிலிருந்து இன்று வரை கணக்கைக்காட்ட சன் டிவி நிர்வாகத்தினர் தயாரா? என்று ஆவேசமாக பேசினார் விஜயகாந்த்.
அப்போது தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார்.
விஜயகாந்த்தின் வங்கி கணக்கு-லாக்கர் முடக்கம்
இந் நிலையில் விஜயகாந்த், ஜேப்பியார் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் நடந்த வருமான வ>த்துறைசோதனையில் மொத்தம் ரூ. 35 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. விஜயகாந்த், ஜேப்பியார் ஆகியோரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.லாக்கர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் சோதனையில் ஜேப்பியாரின் வீடு மற்றும் உறவினர் வீட்டிலிருந்து ரூ. 54 லட்சத்து 22ஆயிரம் மதிப்புள்ள கணக்கில் வராத நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விஜயகாந்த் மற்றும் அவரது உறவினர்களுக்கு ரூ. 60 கோடிக்கு மேலான சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சொத்துக்கள் பெரும்பாலானவற்றுக்கு முறையாக கணக்கு வழக்கு இல்லை. தேமுதிக கட்சிஅலுவலகத்தில் கணக்கு வழக்கு குறித்து ஒரு பதிவேடும் இல்லை என்பதும் சோதனையில் தெரிய வந்துள்ளது.ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியிலும் கணக்கு வழக்கு முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
மேலும் வங்கியில் பெற்ற கடன்கள், அதை அடைத்தது தொடர்பான முறையான கணக்கு வழக்கு இல்லை.அறக்கட்டளை சார்பாக ரூ. 1 கோடியே 75 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அதற்குரியகணக்கும் இல்லை.
மொத்தமாக அனைவரும் ரூ. 35 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. விஜயகாந்த்,ஜேப்பியார், கனகராஜ் ஆகியோரின் 3 வங்கி லாக்கர்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 5 வங்கிக் கணக்குகள்முடக்கப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு வரி கணக்கிடப்பட்டு அந்த வரித் தொகைசம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications