வென்றார் ஷில்பா-பல கோடி பரிசு!
லண்டன்:பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய பிக் பிரதர் நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி வெற்றிபெற்றார்.
லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நிறுவனம் நடத்தி வரும் நிகழ்ச்சி செலப்ரட்டி பிக் பிரதர். இதில் பல்வேறுபிரபலங்களை ஒரே இல்லத்தில் தங்க வைத்து அவர்களின் செயல்பாடுகளை நேரடியாக ஒளிபரப்புவார்கள்.இந்த நிகழ்ச்சியில் இந்த முறை ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டார். அவர் உள்பட மொத்தம் 13போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர்.
ஆரம்பத்திலேயே இந்த நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கியது. ஜேட் கூடி என்ற இங்கிலாந்து நாடக நடிகையும், அவரதுதாயார் உள்பட இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு ஷில்பாவை இனவெறி வார்த்தைகளால் விமர்சித்ததாகபெரும் பரபரப்பு எழுந்தது.
இதையடுத்து சமீபத்தில் ஜேட் கூடியும் அவரது தாயாரும் நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவர்களைத்தொடர்ந்து மேலும் இருவரும் நீக்கப்பட்டனர். இதையடுத்து இப்போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்தது.
நேற்று நடந்த இறுதி வாக்கெடுப்பில் ஷில்பாவுக்கு 63 சதவீத ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. இதனால் அவர்முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் ஜெர்மைன் ஜாக்சனுக்கு2வது இடம் கிடைத்தது.
வெற்றி பெற்றதாக ஷில்பாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது, பிக் பிரதர் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தநூற்றுக்கணக்கான ரசிகர்களும் உரத்த குரல் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். ஷில்பாவுக்கு தான் வெற்றிபெற்றதை நம்ப முடியவில்லை.
கண்களில் நீர் மல்க அவர் வாய் விட்டு உற்சாக குரல் எழுப்பினார். பின்னர் அவரை ஜெர்மைன் ஜாக்சன் கட்டிஅணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஷில்பாவுக்கு பல கோடி பரிசுகள் கிடைக்கவுள்ளன. இதுதவிர ஹாலிவுட் படத்தில்நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவுள்ளது. மேலும் விளம்பரப் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவியும்.
கடந்த 26 நாட்களாக பிக் பிரதர் இல்லத்தில் தங்கியிருந்த ஷில்பா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர்வெளியே வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஷில்பாவை உற்சாகமாகவரவேற்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications