தாமரைக்கனி மகன் மீது கொலை வழக்கு!
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவியின் கணவர் கொலை வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின்மகன் தங்கமாங்கனி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்தவர் சுந்தரி ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித் தலைவியாக இருந்தார். இவரது கணவர் அண்ணாதுரைசெல்வன், மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார்.
சனிக்கிழமை இரவு தனக்குச் சொந்தமான லாட்ஜில் அண்ணாதுரை இருந்தபோது அங்கு ஒரு கும்பல் வந்தது.அண்ணாதுரையை சரமாரியாக வெட்டித் தள்ளிய அக்கும்பல், தடுக்க முயன்ற லாட்ஜ் ஊழியர் ராமரையும்வெட்டி விட்டுத் தப்பினர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக அண்ணாதுரை செல்வனின் தம்பி திராவிடமணி போலீஸில் புகார் கொடுத்தார்.
அதில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எனது அண்ணன் குடும்பத்திற்கும், தங்கமாங்கனி குடும்பத்திற்கும்இடையே முன்பகை இருந்தது. தங்கமாங்கனி குடும்பத்தினர் தூண்டுதலால்தான் அண்ணாதுரைகொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் தங்கமாங்கனி உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
தங்கமாங்கனியும் அவரது அண்ணன் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழனும் இப்போது திமுகவில் தான்உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications