இட்லியால் ரணகளமான கல்யாண வீடு!
கடலூர்:கல்யாண விருந்தில் இட்லிக்குப் பதில் பொங்கல் பரிமாறப்பட்டதால், பெரும் ரகளை ஏற்பட்டு, அடிதடியில்முடிந்தது.
கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திராடன். இவரது மகன் முத்துலிங்கத்திற்கும்,பண்ருட்டி அருகே உள்ள கரும்பூரைச் சேர்ந்த பத்மநாபன் மகள் கஸ்தூரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர்.
முத்துலிங்கம், கஸ்தூரியின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு கல்யாண விருந்து தொடங்கியது. அப்போது இட்லி,பொங்கல், வடை ஆகியவை ப>மாறப்பட்டது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் இட்லி, வடை ஆகியவை காலியாகி விட்டன. முதல் பந்திகளிலேயேமணமகனின் வீட்டார் ஆக்கிரமித்து எல்லாவற்றையும் காலி செய்து விட்டனர் போலும். எனவே பின்னால்சாப்பிட வந்த மணமகள் வீட்டாருக்கு வெறும் பொங்கல்தான் கிடைத்தது.
இதனால் அவர்கள் கோபமடைந்தனர். பெண் வீட்டுக்காரர் ஒருவர் எனக்கு கண்டிப்பாக இட்லிதான் வேண்டும்என்று அடம் பிடித்துள்ளார். ஆனால் இட்லி இல்லை, பொங்கல்தான் இருக்கிறது. சாப்பிடுங்கள் என்றுகூறியுள்ளனர்.
இதையடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகமாறியது. சாப்பாட்டு அறையிலேயே அடித்து உருண்டனர்.
இருக்கைகளை தூக்கி வீசியும், ஒருவரை ஒருவர் தாக்கியும், சட்டைகளை கிழித்தும், வேட்டிகளை உருவியும்சண்டை களை கட்டியது. இதனால் மண்டபமே களேபரமாக இருந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் மண்டபத்தைவிட்டு வெளியே ஓடினர். இதை பொதுமக்கள் திகைத்துப் போய் வேடிக்கை பார்த்தனர்.
இந்த சண்டையில் மாப்பிள்ளை வீட்டாருக்கே அதிகமான அடி விழுந்தது. ஆறுமுகம் என்பவர் உள்பட 4பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
பெண் வீட்டாரின் ஆவேச தாக்குதலால் பயந்து போன மாப்பிள்ளை முத்துலிங்கம் கடலூர் முதுநகர் போலீஸில்புகார் கொடுத்தார். மாப்பிள்ளை வீட்டாரை, பெண் வீட்டார் அடித்த வேகத்தைப் பார்க்கும்போது எனதுவாழ்க்கை எப்படி இருக்குமோ என பயமாக இருக்கிறது என புகார் கொடுத்தார்.
இதையடுத்து பெண் வீட்டாரை காவல் நிலையத்திற்கு அழைத்த போலீஸார் அவர்களை மாப்பிள்ளைவீட்டாருடன் சமாதானம் பேசி இரு தரப்பையும் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications