மதிமுகவை லூஸில் விட்ட காங்கிரஸ் சோனியா
டெல்லி:டெல்லியில் நேற்று தொடங்கிய காந்தியடிகளின் சத்தியாகிரக இயக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள மதிமுகவைத் தவிர பிறகூட்டணிக் கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு அனுப்பியிருந்தது. இதன் மூலம் கூட்டணியிலிருந்து மதிமுக நீக்கப்பட்டு விட்டதாககூறப்படுகிறது.
திமுக கூட்டணியிலிருந்து கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக மதிமுக வெளியேறியது. ஆனால் டெல்லியில், காங்கிரஸ் கூட்டணியில் தாங்கள்நீடிப்பதாக வைகோ கூறி வருகிறார்.
இதுதொடர்பாக ஆரம்பத்திலிருந்தே குழப்பமான நிலைதான் உள்ளது. ஆரம்பத்தில் மதிமுகவும் கூட்டணியில் நீடிப்பதாக காங்கிரஸ் கட்சி கூறிவந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி கூட்டும் கூட்டணிக் கட்சிகளின் பல்வேறு கூட்டங்களுக்கு மதிமுகவை அழைப்பதில்லை. சில நேரம் அழைப்புஅனுப்புகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி இப்படிக் கண்ணாமூச்சி ஆடி வரும் நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், வைகோவுக்கும் இடையே பெரும் உரசல் ஏற்பட்டது.மதிமுக உட்கட்சிப் பூசல் தொடர்பாக போட்டி மதிமுகவினர், திமுகவினர் உதவியுடன், மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தைக் கைப்பற்றலாம்என வைகோ பயந்தார். இதையடுத்து சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்குக்கும் அவர் கடிதம் எழுதினார்.
ஆனால் வைகோ எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து அவர் கொடுத்த பேட்டியில், சோனியா காந்திதான் கட்சிஅலுவலகத்ததைக் காத்தார் என்று கூறினார், மேலும், மன்மோகனும், சோனியாவும் திமுகவின் நடவடிக்கையை கண்டிப்பது போல கருத்துதெரிவித்திருந்தார் என்ற ரீதியில் பேட்டி அளித்திருந்தார்.
இது திமுக தரப்புக்கு கடுப்பைக் கொடுத்தது உடனடியாக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை அழைத்து பிரதமரை சந்தித்துவிளக்கம் கேட்டார். ஆனால் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று பிரதமர் விளக்கினார்.
இதையடுத்து வைகோவைக் கண்டித்து காங்கிரஸ் தரப்பில் அறிக்கை வெளியானது. இந்தச் சூழ்நிலையில் நேற்று டெல்லியில், சத்தியாகிரகநூற்றாண்டு விழா கருத்தரங்கம் தொடங்கியது. இதில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், இடது சாரிக் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.ஆனால் மதிமுகவுக்கு மட்டும் அழைப்பு வரவில்லை.
இதுகுறித்துக் காங்கிரஸ் தரப்பிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் மட்டும்அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. யாருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையோ அவர்கள் கூட்டணியில் இல்லை என்று அர்த்தம் என ஒரு தலைவர்விளக்கினார்.
இதன் மூலம் மதிமுகவை கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி முறைப்படி நீக்கி விட்டதாக கருதப்படுகிறது.
இனிமேலும், நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று வைகோ பேசாமல் இருந்தால் சரி.












Click it and Unblock the Notifications