விஜய்காந்த் சுட்ட வசூல் பணம்: நெப்போலியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சட்டம் தன் கடமையை செய்யும் என படத்தில் மட்டும் வசனம் பேசினால் போதாது. வாழ்க்கையிலும் நடந்து காட்ட வேண்டும் என தேமுதிகதலைவர் விஜயகாந்தை நடிகர் நெப்போலியன் தாக்கியுள்ளார்.

Napolean

இதுகுறித்து நெப்போலியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விஜய்காந்த் எங்கள் தலைவர் கருணாநிதி பற்றி பல தவறான செய்திகளை சொல்லி விமர்சனம் செய்து வருகிறார். வருமான வரி சோதனை என்பது,மத்திய அரசு தனது கடமையை செய்தது. சட்டம் தன் கடமையை செய்யும் என்று படத்தில் மட்டும் வசனம் பேசினால் போதாது.

வாழ்க்கையிலும் அவர் நடந்து காட்ட வேண்டும். மற்றவர்களை ஊழல் பேர்வழி என்று கூறும் விஜய்காந்த் தன்மை நேர்மையானவர் என நிரூபிக்கவேண்டும். மக்களுக்கு போய் சேர வேண்டிய வரிப் பணத்தையே ஒழுங்காக கட்டாத விஜய்காந்த் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்? மூன்றுபடம் எடுத்து 7 லட்சம் நஷ்டம் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? நஷ்டத்துக்காக யாராவது அடுத்தடுத்து படம் எடுப்பார்களா?

கதாநாயகனாக நடித்து பல கோடி சம்பளம் வாங்குபவர் மூன்று படம் நடித்து 7 லட்சம் நஷ்டம் என்று கணக்கு காட்டியிருக்கிறார். இதன் மூலம்வருமான வரித்துறை ஏமாற்றுவதோடு, மக்களையும் முட்டாளாக்க பார்க்கிறார் விஜய்காந்த். தான் பார்க்கும் தொழிலில் கணக்கு பார்க்காதவர்நாட்டினுடைய கணக்கு வழக்குகளை எப்படி பார்ப்பார்?

1996ம் ஆண்டு தலைவர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் விழா எடுத்து தங்க பேனா கொடுத்தோம். அதற்காக திரைப்படத் துறையினரும், பலதொழில் அதிபர்களும் நிதியுதவி செய்ததால் விழா சிறப்பாக நடந்தது. விழா முடிந்தவுடன் மீதமுள்ள 25 லட்சம் பணத்தை கலைஞர் அறக்கட்டளைஎன்று ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய போவதாக இதே விஜய்காந்த் அன்று சொன்னார். இன்று வரை அந்த அறக்கட்டளைதொடங்கவில்லை.

அந்த பணம் எங்கே போயிற்று? அந்தப் பணத்தால் எந்த ஏழை பயன் பெற்றார் என்பதை நாட்டு மக்களுக்கு விஜய்காந்த் தெரிவிப்பாரா? எனதுசொத்து முழுவதும் ஏழைகளுக்கு கொடுக்க தயார், கலைஞர் கொடுப்பாரா? என்று கேட்டுள்ளார்.

மற்றவர்களிடம் இருந்து வசூல் செய்த பணத்தையே ஏழைகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றி ஏப்பம் விட்ட விஜய்காந்த், இப்பொழுது தான் உழைத்துசம்பாதித்த சொத்து முழுவதையும் ஏழைகளுக்கு தருகிறோம் என்று சொல்வது மக்களை ஏமாற்றத்தானே? இந்த வீர வசனம் சினிமாவில் பேசினால்நன்றாக இருக்கும்.

கருணாநிதியின் உழைப்பின் முன் நீங்கள் எல்லாம் எம்மாத்திரம். நீங்கள் பிறக்கும் முன்பே அவர் சினிமாவில் வசனம எழுதி 50 ஆண்டுகளுக்குமுன்பே அன்று அவர் வாங்கிய சம்பளத்திற்கு இணையாக இன்றும் நீங்கள் வாங்கவில்லை.

எத்தனையோ நாடகங்கள், 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம், 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள், பத்திரிக்கைளுக்குகதை, கட்டுரை, சிறுகதை, காவியங்கள், சங்கத்தமிழ், குறளோவியம், பாயும் புலி பண்டார வன்னியன், பொன்னர் சங்கர், தொல்காப்பியம் போன்றஇலக்கியங்கள் என 60 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி எழுதி தமிழை அன்றாடம் வளர்த்து கொண்டு இருக்கும் தலைவரை பார்த்து தொடர்ந்து தரம்தாழ்த்தி பேசி வரும் உங்களைப் பார்த்தால் நீங்களும் ஒரு தமிழனா என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது.

நான் வில்லிவாக்கத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 2005 பிப்ரவரி 1ம் தேதி 700 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல்நாட்டினார் கருணாநிதி. அப்பொழுது விஜய்காந்த கட்சியே ஆரம்பிக்கவில்லை. மேம்பாலம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்த, உடனேவரைபடம் தயாரிக்கப்பட்டு விட்டது.

ஆனால் கோயம்பேடு அருகே பல கடைகள், கட்டிடங்கள் இடிபடும் என்று அப்போதே சொல்லப்பட்டது. அதனால் தன்னுடைய கல்யாண மண்டபம்இடிபடாமல் காப்பாற்றி கொள்ளவே 14.09.05ம் ஆண்டு மதுரையில் கட்சியை ஆரம்பித்தார் விஜய்காந்த். இவர் 25 வருடமாக சினிமாவில்சம்பாதித்து கொண்டு இருந்தபோதெல்லாம் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

சினிமாவில் வாய்ப்பு குறைந்தவுடன் தான் அரசியலில் ஈடுபட்டு அதன் மூலம் தான் சம்பாதித்த சொத்துக்களை எல்லாம் பாதுகாத்து கொள்ளவேண்டும் என்று தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார்.

நடிகர் சங்கத்தில் அவர் தலைவராக இருந்த போது திரையுலகில் ரஜினி, கமல் என்று அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து சிங்கப்பூர், மலேசியாவில்கலை நிகழ்ச்சி நடத்தி, அதன் மூலம் கிடைத்த பணத்தில் நடிகர் சங்க கடனை அடைத்தோம். ஏன் இவர் தன் பணத்தை கொடுத்து அடைக்கவில்லை?

இன்னும் எத்தனையோ நலிந்த நடிகர்கள் வாய்ப்புகள் குறைந்து, வசதிகள் குறைந்து, வயது முதிர்ந்த பிறகும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அந்தஏழை குடும்பத்திற்கு இவர் தன் சொத்தை கொடுத்தாரா?

இன்று அரசியலில் இறங்கி விட்டதால் 232 இடங்களில் நின்று ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் வென்றார். அதற்குள் ஆட்சியை பிடித்து முதல்வர்ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறார். தன்னுடைய கல்லூரிக்கே முதல்வர் ஆக முடியாத போது நாட்டின் முதல்வர் என்றால் இவருக்கு சாதாரணம்ஆகிவிட்டதா?

5வது முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்று 84 வயதிலும் அயராது உழைக்கும் இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகியாக, ராஜதந்திரயாக, உலகதமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதியை எந்த தகுதியும் இல்லாத விஜயகாந்த எல்லாம் விமர்சிப்பதை ஏற்கமுடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு நெப்போலியன் கூறியுள்ளார்.

நெப்ஸ் திடீர் அறிக்கை ஏன்?

ரெய்டு நடந்து, முதல்வர் கருணாநிதியை விஜய்காந்த் திட்டி, பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நெப்போலியன் இப்போது தான் விஜய்காந்தை திட்டிஅறிக்கை விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தன்னை விமர்சித்த விஜய்காந்தை திரையுலகில் உள்ள திமுக பிரமுகர்கள் யாரும் கண்டிக்காதது குறித்தும், நடிகர் சந்திரசேகர் மட்டுமே கண்டித்ததுகுறித்தும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் கவலையோடு பேசினாராம் கருணாநிதி. திமுகவில் இருந்தாலும் விஜய்காந்துடன்தொழில்-வர்த்தகரீதியில் நட்பு வைத்துள்ளதால் இவர்கள் இவ்வாறு செயல்படுவதாக கருணாநிதிக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாம்.

இதையடுத்து தனக்காக வாய்ஸ் தந்த சந்திரசேகரை கருணாநிதியே அழைத்து பாராட்டியதோடு நன்றியும் சொன்னாராம். இந்த விவரம் வெளியானபின்னரே நெப்போலியன் வாய் திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+