ரயில் நிலையங்களில் வயர்லஸ் இன்டர்நெட் வசதி!
டெல்லி:சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கம்பி இல்லா இணைய தள (வயர்லஸ் இன்டர்நெட்) வசதியை ஏற்படுத்த ரயில்வேமுடிவு செய்துள்ளது.
இப்போது முக்கிய விமான நிலையங்களில் தற்போது பயணிகள் வசதிக்காக, கம்பி இல்லா இணைய தள வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதுபோல ரயில் நிலையங்களிலும், இந்த வசதியை செய்ய ரயில்வே துறை ஏற்பாடு செய்து வருகிறது. இதுகுறித்து ரயில்வே துறையைச் சேர்ந்த மூத்தஅதிகாரி ஒருவர் கூறுகையில்,
விமான பயணிகளுக்கு மட்டும் இதுவரை கிடைத்து வந்த இந்த வசதி, இனி ரயில் பயணிகளுக்கும் கிடைக்கும். இதன்மூலம் லேப்-டாப்வைத்திருப்போர் ரயில் நிலையத்தில் இருந்து இன்டர்நெட் சேவையை பெற முடியும்.
முதல் கட்டமாக சென்னை, டெல்லி, மும்பை சென்ட்ரல், ஹவுரா, பெங்களுரூ ஆகிய ஊர்களில் உள்ள ரயில் நிலையங்களில் இந்த வசதிஅளிக்கப்படும்.
இந்த பணியை செய்து முடிக்க அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன், இன்னும் 15 நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந் நிறுவனம்,வை-மேக்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த வசதியை அளிக்கும்.
டெல்லி, மும்பை, பெங்களுரூ ஆகிய ரயில் நிலையங்களில் இந்த பணி வரும் ஏப்ரல், மே மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு விடும். இந்த ஆண்டுஇறுதிக்குள் 100க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் இந்த வசதியை பெறும். மொத்தத்தில் படிப்படியாக 500 ரயில் நிலையங்களில் இந்த வசதிஅளிக்கப்டும்.
மேலும் 250 ரயில் நிலையங்களில் கம்பியுடன் கூடிய இணைய தள வசதி அளிக்கப்படும். கம்பி இல்லா இணைய தளம் வசதி உள்ள ரயில்நிலையங்களில் இருந்து 500 மீட்டர் பரப்பளவில் இருக்கும் வீடுகளுக்கும், இந்த வசதியை ரயில்வே துறை அளிக்க முடியும்.
இருப்பினும் இவ்வசதி ஓடும் ரயில்களுக்குக் கிடைக்காது என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications