நகைக் கடை அதிபரிடம் வழிப்பறி: தப்பும்போதுகுண்டு வெடித்து கொள்ளையன் கை துண்டானது
பெரம்பலூர்:பெரம்பலூர் அருகே நகை கடை அதிபரை தாக்கி ரூ. 5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் தப்பிச் செல்லும்போது அவர்கள்வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவனின் கை துண்டானது.
பெரம்பலூர் மாவட்டம் கர்பட்டாங்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (35). இவர் திட்டக்குடியில் நகை கடை வைத்துள்ளார்.
நேற்றிரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையைப் பூட்டி விட்டு 2 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி நகைகள், ரூ. 1.10 லட்சம்பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வீடு திருப்பி கொண்டிருந்தார்.
![]() |
அப்போது அவரைப் பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் சுப்பிரமணியத்தை வழி மறித்தனர். அவரிடம் இருந்த பணம்,நகைகளை பறிக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து சுப்பிரமணியன் தப்பிக்க மயன்றார்.
இதையடுத்து தங்களிடமிருந்து அரிவாள்களால் சுப்ரமணியத்தைத் தாக்கிய கொள்ளையர்கள் அவர் வைத்திருந்த பணம், நகைகளைப் பறித்துக்கொண்டனர்.
பின்னர் தப்பிச் செல்ல எத்தனிக்கையில், கொள்ளையர்களில் ஒருவர் பையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதில்ஒரு கொள்ளையனின் கை துண்டானது. அவர் அங்கேயே மயங்கி விழுந்தான்.
![]() |
இதனால் அதிர்ந்த மற்ற 2 கொள்ளையர்களும் பணம் மற்றும் வெள்ளி நகைகளை எடுத்து கொண்டு தப்பினர். பதட்டத்தில் தங்க நகைகளைஅங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த சுப்பிரமணியத்தையும், கை துண்டான கொள்ளையனையும்திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவனது பெயர் குருசாமி என்று தெரியவந்துள்ளது.
கோமா நிலையில் இருக்கும் குருசாமியிடம் இருந்து 2 அடையாள அட்டைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் தப்பியோடி 2கொள்ளையர்களும் எளிதில் சிக்குவர் எனத் தெரிகிறது.
தம்பி ஓடிய 2 கொள்ளையர்களும் மாணவர்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதே பகுதியில் கடந்த மாதம் 2 நகை வியாபாரிகளை டேங்கர்லாரியை கொண்டு வழி மறித்துத் தாக்கி ரூ. 1 கோடி மதிப்பு கொண்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications