கொதிக்கிறது பாலாறு: தமிழர்களுக்கு ஆந்திராமிரட்டல்-விரட்டப்பட்ட பாமக-வைகோவுக்கு தடை
வேலூர்:ஆந்திர மாநிலம் குப்பம் அருகே அணை கட்டத் திட்டமிட்டுள்ள பகுதிக்கு தமிழர்கள் யாரும் வரக் கூடாது, மீறி வந்தால் விரட்டிஅடிப்போம், கைது செய்வோம் என்று ஆந்திர அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் வடக்கில் உள்ள வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓடுவதுபாலாறு. ஆந்திர மாநிலத்தில் உற்பத்திாயகும் ஆறு என்பதால் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில்பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 12 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வர வேண்டியபாலாற்று நீர் வராமல் உள்ளது. கன மழை பெய்தால்தான் தண்ணீர் வரும். மற்ற நேரங்களில் பாலாறு, பாலைவனமாகத்தான்காட்சி அளிக்கும்.
இந் நிலையில் கணேசபுரத்தில் கட்டப்படும் அணையால் தமிழகத்திற்கு சுத்தமாக தண்ணீர் வராத நிலை ஏற்படும், வடமாவட்டங்கள் வரண்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர அரசின் இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால்அணையை கட்டியே தீருவோம் என ஆந்திரா பிடிவாதமாக உள்ளது.
இந் நிலையில், பாமக சார்பில் நேற்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் ஏராளமான பாமகவினர்கணேசபுரத்திற்குச் சென்றனர். பாலாற்றில் இறங்கி அவர்கள் ஆந்திர அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் அங்கு போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து சித்தூர் மாவட்ட ஊராட்சித் தலைவர்ஜெயராமரெட்டி தலைமையில் ஆந்திர விவசாயிகள் கோபமடைந்தனர்.
அவர்களும் ஏராளமான பேர் திரண்டு அங்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாமகவினர் கட்டி வைத்திருந்தகொடிகளையும், பேனர்களையும் கிழித்தெறிந்தனர். இரு தரப்புக்கும் இடையே மோதல் மூளும் சூழல் நிலவியதால் போலீஸார்குவிக்கப்பட்டனர்.
அங்கு ஆந்திர மாநில போலீஸார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஜி.கே.மணியிடம் உடனடியாக இங்கிருந்து கிளம்பவேண்டும், இங்கு அணை கட்டப்படுவது நிச்சயம் என்று கோபமாக கூறினர். அதற்கு ஜி.கே.மணியும் கோபமாக, அப்படிக்கட்டினால் அதை நாங்கள் உடைத்தெறிவோம் என்றார்.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய பகுதியில் தமிழகத்திலிருந்து யாரும் வந்து போராட்டம் நடத்தக் கூடாது என காவல்துறைஎச்சரித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி இல்லாமல்யாரேனும் நுழைந்தால், குறிப்பாக தமிழர்கள் நுழைந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.
தமிழர்கள் போராட்டம் நடத்தும் எண்ணத்தோடு கூட்டமாக வந்தால் விரட்டி அடிப்போம். எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைதீவிரப்படுத்தியுள்ளோம் என்றார்.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இங்கு அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. எங்களது பகுதிவிவசாயிகள் நலனுக்காகவே அணை கட்டுகிறோம்.
தற்போது அடிக்கல் நாட்டு விழாவை தள்ளி வைத்துள்ளோம். ஆனால் அணை கட்டுவது உறுதி. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே நிச்சயம் அணை கட்டுவோம் என்றார்.
தடையை மீறும் வைகோ:
இதற்கிடையே வேலூரில் மதிமுக சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. ஆனால்தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என வைகோ அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டிவருகின்றன. இதைக் கண்டித்து 7ம் தேதி வேலூரில் போராட்டம் நடத்தவுள்ளோம்.
முறைப்படி காவல்துறையிடம் அனுமதி கோ> விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது. ஆனால்அதே வேலூரில் கடந்த 19ம் தேதி திமுக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது, அதற்கு எந்தத் தடையும்விதிக்கவில்லை.
ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவை அறப் போராட்டங்கள், அவற்றை நடத்துவது எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமை.ஆனால் திமுக அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை நசுக்க காவல்துறையை பயன்படுத்துகிறது.
எனவே திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் கண்டனம் தெரிவிப்பதோடு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபிட 7ம் தேதி பிற்பகல் 3மணிக்கு எனது தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications