திமுக பிரமுகர் கொலையில் தாமரைக்கனியின் மகன் கைது-மேலும் 3 மகன்களுக்கு வலை!
ஸ்ரீவில்லிப்புத்தூர்:ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சித் தலைவி சுந்தரியின் கணவரும் திமுக பிரமுகருமான அண்ணாதுரை செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கில்தாமரைக்கனியின் 2வது மகன் ஆணழகன் கைது செய்யப்பட்டுள்ளார். மூத்த மகனும் மாஜி மந்திரியுமான இன்பத் தமிழன் மற்றும் மேலும் இருமகன்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் திமுகவில் இணைந்தவர் இன்பத்தமிழன். அவருக்கு சில காலம் முன்னதாக தங்கமாங்கனியும் திமுகவில்இணைந்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் அதிமுகவில் இருந்தவரை தாமரைக்கனியும் போட்டி அரசியல்நடத்தி வந்தவர்கள். தாமரைக்கனி திமுகவுக்கு வந்த பின்னரும் அந்த போட்டி தொடர்ந்தது. தாமரைக்கனி இறந்த பின்னர் கேகேஎஸ்எஸ்ஆர் தான்அந்த மாவட்டத்தில் அசைக்க முடியாத அரசியல்வாதியாக உள்ளார்.
இந் நிலையில் திமுகவில் இணைந்துவிட்டாலும் கேகேஎஸ்எஸ்ஆர் தரப்புடன் ஏட்டிக்குப் போட்டி அரசியலில் இன்பத்தமிழனும் தங்கமாங்கனியும்ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் கேகேஎஸ்எஸ்ஆரின் ஆதரவாளரான அண்ணாதுரை செல்வன் கடந்த 27ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகரவிக்குமார், வைரமுத்து ஆகியோரை போலீசார் ரைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கொலையில் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முரளி உள்பட மேலும் 5 பேர் சம்பந்தப்பட்டதுதெரியவந்தது. இதையடுத்து முரளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்தக் கொலை குறித்து டிஎஸ்பி சாகுல் ஹமீத் கூறுகையில்,
தாமரைக்கனி குடும்பத்தினருக்கும் அண்ணாதுரைக்கு இடையே உட்கட்சிப் பூசலும் முன் விரோதமும் இருந்து வந்தது. இதனால் தான் இந்தக்கொலை செய்யப்பட்டுள்ளது. அண்ணாதுரை செல்வனை கொலை செய்ய தாமரைக்கனி வீட்டில் தான் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.
இந் நிலையில் தாமரைக்கனியின் 2வது மகனான வழக்கறிஞர் ஆணழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே போல மூத்த மகன் இன்பத்தமிழன், 3வது மகனான தங்கமாங்கனி (இவர் திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்), 4வது மகன்தமிழன்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்தக் கொலைக்கு திட்டம் போட்டதோடு, கூலிப் படையைக் கொண்டு இந்தக் கொலையை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications