ஆத்மாலயா ஆசிரமத்தில் 4 பெண்கள் மர்ம சாவு?
சென்னை:சென்னை அருகே கம்மார்பாளையம் என்ற இடத்தில் உள்ள ஆசிரமத்தில் 4 இளம் பெண்கள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும், இதைவெளியில் சொல்லாமல் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 3 ஆண்களும் இங்கு மர்மாக இறந்துள்ளதாகவும் தகவல் பரவியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள சோழவரம், கம்மார்பாளையம் சாலையில் ஸ்ரீராமகிருஷ்ணா ஆத்மாலயா எனற ஆதரவற்றோர் ஆசிரமம் உள்ளது.கடந்த 22 வருடங்களாக இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இதை சுவாமி அமுதானந்த தவயோகி என்பவர் நிர்வகித்து வருகிறார்.
900 நாட்கள் இரவில் கண் விழித்து காளி யாகம் நடத்தியவர் இவர். இதற்காக மகா ஞானி என்று அப்பகுதியினரால் பாராட்டப்பட்டவர்.
இந்த ஆசிரமத்தில் ஏராளமான அனாதைக் குழந்தைகள் தங்கியுள்ளனர். இதுதவிர அன்னை ஸ்ரீசாரதா முதியோர் இல்லமும் இங்கு உள்ளது.வயதான பெற்றோரை பராமரிக்க முடியாத பலரும் தங்களது பெற்றோர்களை இங்கு விட்டு விட்டுள்ளனர். இதுபோல நூற்றுக்கும் மேற்பட்டமுதியோர்கள் இங்கு தங்கியுள்ளனர்.
சிறு வயதில் அனாதைக் குழந்தைகளாக வளர்ந்த பல சிறுமிகள் இப்போது இளம் பெண்களாக வளர்ந்து இங்கேயே தங்கியுள்ளனர். இவர்களைஆசிரமத்தை விட்டு வெளியே அனுப்புவதில்லையாம். ஆனால் ஆண்கள் மட்டும் வாலிப வயதை அடைந்ததும் வெளியேற்றப்பட்டு விடுவராம்.
இந்த ஆசிரமத்தில் அமுதானந்த தவயோகி, அடிக்கடி குண்டலினி யாகம் நடத்துவார். இதற்காக யாக குண்டம் அமைத்துப் பூஜை செய்வார். இதில்இளம் பெண்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாம்.
இந்த யாகத்தில் கலந்து கொண்டால் நோய் நொடிகள் நீங்கும் என்ற தகவல் பரவியதால், அப்பகுதியினர் பலரும் இந்த பூஜை, யாகத்தில் பங்கேற்கஆர்வம் காட்டுவது வழக்கம்.
வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் கூட இந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி வந்து செல்வதுண்டு. ஆசிரமத்திற்கு நிதியுதவிகளும் வந்தவண்ணம்உள்ளன.
இந் நிலையில் கடந்த வாரம் ஆசிரமத்தில் தங்கியிருந்த 7 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்தனர். அவர்களில் 4 பேர்பெண்கள். இவர்கள் மரணம் குறித்து வெளியில் யாருக்கும் தெரிவிக்காமல், ஆசிரமத்திற்குள்ளாகவே பிணங்களை புதைத்து விட்ட செய்திஇப்போது வெளியில் கசிந்துள்ளது.
இந்தத் தகவல் சோழவரம் பகுதியில் பரவவே, போலீஸில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணையில்குதித்துள்ளனர்.
தவயோகி சாமியார் நள்ளிரவில் காளி பூஜை நடத்தும்போது இளம்பெண்களை மட்டும் உடன் வைத்துக் கொள்வார். அவருடன் இருந்த பலபெண்களுக்கு கடும் தோல் வியாதி இருந்துள்ளது. இது எப்படி வந்தது என்பது தெரியவில்லை. சுகாதாரக் குறைவு காரணமா அல்லது வேறுஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை.
இந்த நோய் முற்றி, உடல் உள் உறுப்புகளும் பாதிக்கப்பட்டே 4 இளம் பெண்களும் இறந்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ஏன் வெளியில்தெரியாமல் உடல்கள் புதைக்கப்பட்டன என இப் பகுதியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் 3 ஆண்கள் மர்மமாக இறந்துள்ளதாகவும், இதில் ஒரு வாலிபரை சாமியார் அடித்து உதைத்தில் அவர் இறந்துள்ளதாகவும் புகார்கூறப்படுகிறது.
இதையடுத்து ஆசிரமத்தில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications