கால்வாயில் போடப்பட்ட கடத்தப்பட்ட சிறுவன்!
சென்னை:சென்னை அருகே மணலியில் ரூ. 5 லட்சம் பணம் கேட்டு கடத்தப்பட்ட 5 வயது யூ.கே.ஜி. சிறுவனை, காலைக் கட்டி கால்வாயில் போட்டு விட்டுகடத்தல்காரர்கள் தப்பினர்.
மணலி காமராஜர் தெருவில் வசித்து வருபவர் தானாராம். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் அதே பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவரது 5வயது மகன் விமல். யு.கே.ஜி. படித்து வருகிறான்.
கடந்த 30ம் தேதி தனது வீட்டுக்கு முன்பாக விமல் விளையாடிக் கொண்டிருந்தபோது சிலர் அவனைக் கடத்திச் சென்றனர். பின்னர் தானாராம்வீட்டுக்கு போன் செய்து 5 லட்சம் பணம் கொடுத்தால் விமலை விட்டு விடுவதாக கூறி 8 முறை போன் செய்து மிரட்டினர்.
சிறுவனைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகளை அமைத்த போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். கடத்தல்காரர்கள் பணத்துடன் கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, மீஞ்சூர் ஆகிய இடங்களுக்கு வருமாறு கூறியதால், போலீஸ் ஆலோசனைப் படி போலி பணத்துடன் தானாராமின் குடும்பத்தினர்சென்று பார்த்தனர்.
ஆனால் கடத்தல்காரர்கள் பணத்தை வாங்க வரவில்லை. இதனால் அவர்களும், மாறு வேடத்தில் சென்ற போலீஸாரும் ஏமாற்றமடைந்தனர்.ஆனால் கடத்தல்காரர்கள் தானாராம் குடும்பத்துக்குத் தெரிந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என போலீஸார் சந்தேகித்தனர்.
இந்த நிலையில் போலீஸ் பிடி இறுகுவதைக் கண்ட கடத்தல்காரர்கள், நேற்று பிற்பகல் விமலை விடுவித்தனர். அவனது கால்களைக் கட்டி மணலிஎஸ்.ஆர்.எப். தொழிற்சாலையின் பின்புறம் உள்ள மழை நீர்க் கால்வாயில் போட்டு விட்டுச் சென்றனர்.
அவன் அழுவதைக் கேட்டு அங்கு ஓடி வந்த நிறுவன காவலாளி, கால்களை கட்டியிருந்த கயிற்றை விடுவித்து அவனை மணலி காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார். இதையடுத்து அவன் விமல்தான் என்பதை உறுதி செய்து கொண்ட போலீஸார் குடும்பத்தினருக்குத்தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த தானாராமும், அவரது மனைவி ஜக்ரியும், விமலைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுது கட்டிப் பிடித்துக் கொண்டனர்.
பின்னர் விமலிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, தன்னைக் கடத்தியது 2 இளைஞர்கள் என்றும், அவர்கள் அப்பாவின் கடைக்குபலமுறை வந்துள்ளனர் என்றும், அப்பாவுக்குத் தெரிந்தவர்கள்தான் என்றும் கூறினான்.
இதையடுத்து வேறு ஏதோ காரணத்திற்காகத்தான் விமலை அவர்கள் கடத்தியிருக்கிறார்கள் என்று கூறிய மாதவரம் துணை ஆணையர்கண்ணப்பன், விரைவில் குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காணாமல் போன சிறுவன் பத்திரமாக திரும்பியதால் போலீஸாரும், குடும்பத்தினரும் நிம்மதி அடைந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications