பிரேம்ஸ் சொத்துக்களை ஏலம் விட தடை!
மதுரை:செக்ஸ் சாமியார் பிரேமானந்தாவின் சொத்துக்களை ஏலம் விட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திருச்சி அருகே ஆசிரம் நடத்தி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, ஒரு கொலையையும் செய்த குற்றச்சாட்டின் பேரி>ல் கைது செய்யப்பட்டுஇரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த பிரமோனந்தா. தற்போது கடலூர் சிறையில் தண்டனை அனுபவித்துவருகிறார் பிரேமானந்தா.
அவரது ஆசிரமம் உள்ளிட்ட சொத்துக்களை, வருமான வரி பாக்கிக்காக (ரூ. 92 லட்சத்து 62 ஆயிரம்) ஏலம் விட வருமான வ>த்துறை முடிவுசெய்தது. இதை எதிர்த்து பிரேமானந்தா அறக்கட்டளை நிர்வாகி தமயந்தி மாதாஜி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தடை கோரி வழக்குதொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. பின்னர் தடை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏலம் நடந்தது.ஆனால் அதிக தொகைக்கு ஏலம் போகவில்லை. மறு ஏலத்தில் ஏலம் கேட்டவர் கடைசி நேரத்தில் ஜகா வாங்கியதால் ஏலம் ரத்தானது.பிரேமானந்தாவின் பினாமிகள்தான் ஏலத்தை சொதப்பியதாக புகார் உள்ளது.
இந் நிலையில், ஏலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து தமயந்தி மாதாஜி உயர்நீதிமன்றக் கிளையில் மேல் முறையீடு செய்தார். அதில்,பிரேமானந்தாவின் சொத்துக்கள் அவரது பெயரில் இல்லை. அறக்கட்டளையின் பெயரில் உள்ள இந்த சொத்துக்களை தனி நபரின் வருமான வ>பாக்கிக்காக ஏலம் விட சட்டப்படி அனுமதி இல்லை.
இந்த அறக்கட்டளை பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. அதில் ஆயிரக்கணக்கானோர் படித்து வருகின்றனர். ஏலம் நடந்தால்அவர்களின் படிப்பு பாதிக்கப்படும். எனவே ஏலம் விட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எலிப் தர்மாராவ், ஜனார்த்தன ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,ஏலத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. பிரேமானந்தா தான் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ. 64 லட்சம்ரூபாயை 2 தவணைகளாக செலுத்த வேண்டும்.
32 லட்சம் ரூபாயை பிப்ரவரி மாத இறுதிக்குள்ளும், மீதப் பணத்தை மார்ச் மாதத்திற்குள்ளும் செலுத்த வேண்டும். தவறினால் இந்த இடைக்காலத்தடை தானாக ரத்தாகி விடும் என்று தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications