4 எஸ்.பிக்கள் மத்தியப் பணிக்கு மாற்றம்
டெல்லி:மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் நான்கு மண்டலங்களுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், ஜோத்பூர், வாரணாசி ஆகிய 5 மண்டலங்களுக்கானபணியிடங்கள் காலியாக இருந்தன. எஸ்.பி. அந்தஸ்திலான பதவிகள் இவை.
இப்பதவிகளில் அமர இந்தியா முழுவதுமிருந்து 50க்கும் மேற்பட்ட எஸ்.பிக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களை அந்தந்த மாநிலஅரசுகள் பரிந்துரைத்திருந்தன.
தமிழக கியூ பிரிவு எஸ்.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம், தலைமைச் செயலக பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் சங்கர், ஆளுநரின் பாதுகாப்புஅதிகாரி திவாரி, கடலூர் எஸ்.பி. சஞ்சய்குமார் ஆகியோர் உள்ளிட்ட தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளும் விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மேற்கண்ட நான்கு தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளும் மத்திய போதைப் பொருள் மண்டல எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தென் மண்டலத்திற்கு டேவிட்சன் தேவாசிர்வாத.ம், மேற்கு மண்டலத்துக்கு சங்கரும், மத்தியமண்டலத்துக்கு திவாரியும், வடக்கு மண்டலத்துக்கு சஞ்சய்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜோத்பூருக்கு மட்டும் வேறு மாநில அதிகாரிநியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் ஒரே துறையில், ஒரே மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றுகூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications