ஆன்மீகவாதிகள்-கருணாநிதி நட்பு தப்பா?
மதுரை:ஆன்மீகவாதிகளுடன் முதல்வர் கருணாநிதி நட்புறவோடு பழகி வருவதை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று சுகாதாரத் துறை அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மதுரையில் அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தை அவர் தொடங்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் ராமச்சந்திரன் பேசுகையில்,மதத் தலைவர்கள் மேற்கொள்ளும் நலத் திட்டங்களில் என்ன தவறு இருக்கிறது? அதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதிலும், ஆதரிப்பதிலும் என்ன தவறு இருக்கமுடியும்?
திமுக நிறுவனரான முன்னாள் முதல்வர் அண்ணாவும் கூட, ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று கூறியுள்ளார். அதே அணுகுமுறையோடுதான்முதல்வர் கருணாநிதியும் செயல்பட்டு வருகிறார்.
முதல்வர் கருணநிதியின் வீட்டுக்கு சாய்பாபா போனதை சிலர் விமர்சிக்கிறார்கள். இது தவறானது, தேவையில்லாதது. அதேபோல சுனாமியால்பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதா அமிர்தானந்த மயி மடம் கட்டிக் கொடுத்துள்ள வீடுகளைத் திறக்க நாகையில் நடந்த விழாவில் மாதா அமிர்தானந்த மயியுடன்முதல்வர் ஒரே மேடையில் பங்கேற்றதையும் விமர்சிக்கிறார்கள்.
இந்த விமர்சனங்கள் தவறானவை, அவசியம் இல்லாதவை என்றார் ராமச்சந்திரன்.
விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தை அமிர்தானந்த மயி மடம் கோவை, திருச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அமல்படுத்தி வருகிறது. இதன்படிபொருளாதாரரீதியாக நலிவடைந்த நிலையில் உள்ள 5000 விதவைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு உதவிகளை மடம் வழங்குகிறது.
இதேபோல மடத்தின் சார்பில் சுய உதவித் திட்டத்தை மதுரை மேயர் தேன்மொழி தொடங்கி வைத்து பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications