ரயில்வேயும் மலையாளிகளும்: வீரபாண்டி ஆறுமுகம் கடும் எச்சரிக்கை
சேலம்:ரயில்வேயில் பெரும்பாலும் கேரள அதிகாரிகளே உள்ளனர். எனவேதான் சேலம் கோட்டம் அமைவதற்கு அவர்கள் முட்டுக்கட்டைபோடுகிறார்கள் என வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
சேலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம், சேலம் கோட்டம் அமைக்க கேரள அரசுஎதிர்ப்பு தெரிவித்து வருவது தொடர்பாக பேட்டி அளித்தார்.
ஆறுமுகம் கூறுகையில், கோவை, திருத்துறைப்பூண்டி, மேட்டுப்பாளையம், ஊட்டி, சேலம் சந்திப்பு, விருத்தாச்சலம், ஈரோடு-திருச்சி போன்றஇடைப்பட்ட ரயில் நிலையங்களில் உள்ள 842 கிலோமீட்டர் பாதையை இணைத்து சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும்சேலம் பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நியாயமான கோரிக்கையை மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் ஏற்று, புதிய கோட்டம் அமைக்க ஒப்புதல் தந்தது. அதன் பின்னர்சிறப்பு அலுவலர் அமைக்கப்பட்டு, ரயில்வே பணியாளர் தங்கும் இடம், கோட்ட அலுவலக இடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதையடுத்து பழைய சூரமங்கலத்தில் சேலம் இரும்பாலை அருகே 12 ஏக்கர் 91 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு வருகிற ஏப்ரல் 14ம் தேதிகால்கோள் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது கேரள முதல்வர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் ரயில்வே கோட்டம் அமைப்பதைத் தடுக்க கேரள முதல்வருக்குஎன்ன உரிமை உள்ளது?
தமிழக அமைச்சர் என்ற முறையிலும், சேலம் தொகுதியின் மக்கள் பிரதிநிதி என்ற முறையிலும் கேரள முதல்வருக்கு எனது கடும் கண்டனத்தைத்தெரிவித்துக் கொள்கிறேன்.சேலம் கோட்டத்தை எதிர்த்து 6ம் தேதி பாலக்காட்டில் கேரள எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளனர்.அவர்களுக்குப் பதிலுக்குப் பதில் தமிழகமும் போராட்டத்தில் ஈடுபட்டால் என்னாகும் என்பதை கேரள முதல்வர் உணர வேண்டும்.
இரு மாநில உறவுகளும் கெட்டுப் போகும், இதை உணராமல் கேரள முதல்வர் செயல்படுகிறார். ரயில்வேயில் பெரும்பாலும் கேரள அதிகாரிகளேஉள்ளனர். எனவேதான் சேலம் கோட்டம் அமைவதற்கு அவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களோ என்ற சந்தேகம் சாதாரண பொதுமக்கள்மனதில் எழுகிறது என்றார் ஆறுமுகம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications