குடிசையில் தீ-போதையில் சிக்கி கருகிய தம்பதி!
சென்னை:சென்னையில் டுமீங் குப்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இதில், குடிபோதையில் படுத்துத் தூங்கிய குப்பை பொறுக்கும் கணவனும், மனைவியும் தீயில் கருகி பரிதாபமாகஇறந்தனர்.
மைலாப்பூர் டுமீங் குப்பத்தைச் சேர்ந்தவர் சார்லி. 65 வயதாகும் இவரது மனைவி விக்டோரியா(50). இருவரும்குப்பை பொறுக்கி வாழ்க்கையை ஓட்டி வந்தனர்.
கீற்றால் வேயப்பட்ட குடிசையில் தங்கியிருந்தனர். நேற்றிரவு வழக்கம்போல் நன்றாக குடித்து விட்டு படுத்துத்தூங்கினர். இன்று அதிகாலை திடீரென வீட்டில் இருந்த சிம்னி விளக்கு கீழே விழுந்து குடிசையில் தீப்பிடித்துக்கொண்டது.
மளமளவென தீ பரவ ஆரம்பித்தது. ஆனால் குடிபோதையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த சார்லி,விக்டோரியாவால் எழுந்து ஓட முடியவில்லை. இதனால் இருவரும் உயிரோடு கருகி பிணமானார்கள்.
இவர்களது குடிசையில் பற்றிய தீ பக்கத்தில் உள்ள குடிசைகளுக்கும் பரவியது. தீ வேகமாக பரவியதில் 500குடிசைகள் எரிந்து சாம்பலாயின. அந்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்துவெளியே ஓடினர். வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள டிவி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
8 தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயைஅணைத்தனர். ஆட்சித் தலைவர் ஜெயா, மைலாப்பூர் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர், மாநகராட்சிஅதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
நிவாரணப் பொருட்களும் குடிசைவாசிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் தங்க தற்காலிக குடியிருப்புக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications