ராமதாஸ், வைகோ ஏமாற்றம்-பாஜக வரவேற்பு
சென்னை:காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவும், இதை ஏற்க இயலாது எனவும் பாமகநிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளதாகவும் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும்மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுவர் மன்றத் தீர்ப்பில் ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீரைகர்நாடகம் திறந்து விட வேண்டும் என்றும், மீதி மழை பெய்யும்போது கிடைக்கும் நீர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இடைக்காலத் தீர்ப்பின்போது 205 டிஎம்சி தண்ணீ"ரை திறந்து விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சியாக குறைத்து இருக்கிறது.
இது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. இந்தத் தீர்ப்பை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எனவேஉடனடியாக அ னைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்து விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
வைகோ:
வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தீர்ப்பு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்துள்ளது. தமிழக மக்கள்வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.
இடைக்கால நிவாரணத்தை விட தற்போது குறைவான தண்ணீரை ஒதுக்கியுள்ளனர். பவானி, அமராவதி,நொய்யல் போன்ற ஆறுகளையெல்லாம் சேர்த்து கணக்கிட்டு 419 டிஎம்சி என்று கூறுவது பெரும் பித்தலாட்ட,ஏமாற்றுத்தன அறிவிப்பாகவும்.
இந்தத் தீர்ப்பை தமிழக மக்களால் ஏற்க இயலாது. தமிழக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நியாயம்மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
கண்காணிப்பு குழு-பாஜக கோரிக்கை:
இது குறித்து திருச்சியில் நிருபர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன்,
காவிரி பிரச்சனையை பொருத்தவரை நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை பாஜக வரவேற்கிறது. அதே நேரத்தில் நடுவர் மன்ற தீர்ப்புபடி தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்கப்படுகிறதா என்பதைகண்காணிக்க வேண்டும்.
இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டு அந்த குழுவினர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காவிரி நடுவர் தீர்ப்பு பற்றி அனைத்து கட்சி கூட்டத்தைகூட்டவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டம் நடந்தால் அந்த கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications