கல்யாண வீட்டில் பெண்ணை வெட்டி நகை கொள்ளை
சென்னை:திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த பெண்ணின் கையை வெட்டி அவர் அணிந்திருந்த 8 பவுன் நகைகளைதிருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்புநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என கல்யாண மண்டபத்தில் கூட்டம் நிரம்பிவழிந்தது. பெண் வீட்டைச் சேர்ந்த உறவினரான திருச்சியைச் சேர்ந்த பிரசாத் வந்திருந்தார். அவருடன் மனைவிமீனாட்சியும் (60) உடன் வந்திருந்தார்.
சிறு நீர் கழிப்பதற்காக கல்யாண மண்டபத்திற்குள் இருந்த கழிப்பறைக்குச் சென்றுள்ளார் மீனாட்சி. அப்போதுஆண்கள் கழிப்பறையிலிருந்து வந்த ஒரு நபர் மீனாட்சியைப் பின் தொடர்ந்து வந்துள்ளான்.
அவனைப் பார்த்து அதிர்ந்த மீனாட்சியை, கண் இமைக்கும் நேரத்திற்குள் கழிப்பறைக்குள் இழுத்துச் சென்றஅந்த நபர், தன்னிடமிருந்த கத்தியால், கழுத்திலும், கையிலும் வெட்டியுள்ளான். பின்னர் அவர் அணிந்திருந்த 8பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஓடி விட்டான்.
அவன் போன பின்னர் மீனாட்சி ரத்தம் வழிய அலறியுள்ளார். இதையடுத்து அங்கு அனைவரும் ஓடி வந்தனர்.ரத்த வெள்ளத்தில் கிடந்த மீனாட்சியைப் பார்த்து அதிர்ந்த அவர்கள் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
உடனடியாக ராயபுரம் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கல்யாண வீட்டில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications