லாலுவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு-கோரிக்கை
சென்னை:தமிழக ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்திடம் திமுகஎம்பிக்கள் மனு கொடுத்துள்ளனர்.
ரயில்வே பட்ஜெட் வெளியாகவுள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜா, வேங்கடபதி, சுப்புலட்சுமி,ஜெகதீசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணசாமி, விஜயன், பழனிச்சாமி, பவானி ராஜேந்திரன்,ராதிகா செல்வி, சுகவனம் ஆகியோர் லாலு பிரசாத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.சென்னை-தூத்துக்குடி இடையே இருவழிப் பாதை, சென்னை-திருச்சி-மதுரை, மதுரை-ராமேஸ்வரம்,மதுரை-நாகர்கோவில், கோவை-மதுரை, சேலம்-கோவை, கோவை-திருச்சி, சேலம்-காட்பாடி ஆகியவழித்தடங்களில் புதிய பயணிகள் ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாம்ராஜ் நகர்-சத்தியமங்கலம் இடையே புதிய ரயில் பாதைஅமைத்து அதை மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்க வேண்டும்.
திண்டுக்கல்-பொள்ளாச்சி-கோவை மார்க்கத்தில் ரூ. 343.17 கோடி மதிப்பீட்டில் 228.88 கி.மீ மீட்டர்கேஜ்பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும். ஆய்வு மேற்கொள்ளப்பட்டமயிலாடுதுறை-திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் ரூ. 441.70 கோடி செலவில் மீட்டர்கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணியை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.
கரூர், சேலம் இடையே ரூ. 229.88 கோடி மதிப்பில் 85 கி.மீ நீளத்துக்கு புதிய ரயில்பாதை அமைக்கும் பணிநடக்கிறது. இப்பணிக்கு கடந்த நிதியாண்டு வரை ரூ. 88.7 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதைவிட கூடுதல் நிதி ஒதுக்கி திட்டத்தை விரைவாக முடிக்க உதவ வேண்டும்.
மேலும் திருச்சி-கோவை இடையில் ரயில்பாதையை மின்மயமாகும் பணியை விரைவுபடுத்தவும்,விழுப்புரம்-திருச்சி மார்க்கத்தில் 254 கி.மீ நீள ரயில் பாதை ரூ. 96.67 கோடி செலவில் மின்மயமாக்கப்பட்டுவருகிறது. இதை உரிய காலத்தில் நிறைவேற்ற வசதியாக இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கவும் எம்பிக்கள்வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லி-மும்பை, டெல்லி-கொல்கத்தா இடையே சரக்கு போக்குவரத்துக்காக தனி ரயில் பாதை அமைப்பதுதொடர்பான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே தொடங்கப்படுள்ளன. அதே போல டெல்லியில் இருந்துசென்னை-மதுரை இடையேயும் சரக்கு போக்குவரத்துக்கு தனி பாதை அமைக்க வேண்டும் என அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
3 மாதத்துக்கு நாகர்கோவில் சிறப்பு ரயில்
இதற்கிடையே சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் வியாழக்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்களை மேலும் 3 மாதங்களுக்குதெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது.
மார்ச் 2, 9, 23, 30 ஆகிய தேதிகளிலும், ஏப்ரல் 6 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் சென்னையிலிருந்து இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு புறப்படும். இதேபோல நாகர்கோவிலிருந்து இந்தமாதம் 11, 18, 25 மற்றும் மார்ச் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ஏப்ரல் 1, 8, 15 ஆகிய நாட்களிலும் சென்னைக்கு இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications