வேட்பாளர்களுக்கு மிரட்டல்: பாஜக போராட்டம்
சென்னை:சென்னை மாநகராட்டித் தேர்தலில் போட்டியிலிருந்து விலகுமாறு திமுகவினர் மிரட்டுவதாகக் கூறி பாஜகநிர்வாகிகள், தங்களது வேட்பாளர்களுடன் அண்ணா சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் 47 வார்டுகளில் பாஜக போட்டியிடுகிறது.
இதில் 20வது பாஜக வேட்பாளர் பாலாஜி போட்டியிலிருந்து விலகி விட்டார். அவர் மிரட்டப்பட்டதாக புகார்எழுந்துள்ளது.
இந் நிலையில் இன்று 38 பாஜக வேட்பாளர்களையும் அழைத்துக் கொண்டு பாஜக பொதுச் செயலாளர்குமாரவேலு, துணைத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மகளிர் அணித் தலைவி சுஜாதா ராவ் உள்ளிட்டோர்அண்ணா சாலைக்கு வந்தனர்.
நந்தனம் தேவர் சிலை முன்பு அமர்ந்த அவர்கள் அங்கு சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால்அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீஸார் அனைவரும் கலைந்து செல்லவேண்டும் என எச்சரித்தனர்.
இதைக் கேட்டு கோபமடைந்த பாஜகவினர், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மிரட்டுபவர்களை விட்டு விட்டு எங்களை விரட்டுவதா என்று கோபமாக கேட்டனர்.
அப்போது ஒரு தொண்டரை, போலீஸ் அதிகாரி தள்ளி விட்டதால் அங்கு பதட்டம் எழுந்தது. பின்னர்சாலையிலிருந்து எழுந்து ஓரமாக நிற்குமாறு போலீஸார் கூறினார். ஆனால் அவர்கள் யாரும் எழுந்திருக்காமல்,கமிஷனரை வரச் சொல்லுங்கள், அப்புறம் போகிறோம் என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து பாஜக வேட்பாளர்கள் அனைவரையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து குமாரவேலு கூறுகையில், வேட்பாளர்களின் வீடுகளுக்குச் சென்று மிரட்டுகிறார்கள். முதலில்பணத்தைக் காட்டி ஆசை வார்த்தை கூறியுள்ளனர். பணியாதவர்களை கொலை செய்து விடுவோம் என கூறிமிரட்டியுள்ளனர்.
ஒரு பெண் வேட்பாளர் வீட்டுக்குச் சென்று அவரது மகளைக் கடத்திச் சென்று விடுவோம் என்றுமிரட்டியுள்ளனர். அந்த வேட்பாளர் வசிக்கும் இடம் முதல்வரின் தொகுதியான சேப்பாக்கம்.
போட்டியில்லாமல் தேர்வு செய்யப்படுகிறவர்களை வேட்பாளர்களாகவே ஏற்றுக் கொள்ள முடியாது.எங்களுக்கு அரசு மீதும், காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லை.
தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications