காவிரி-ஜெ. புகாருக்கு துரைமுருகன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஜெயலலிதா கூறுவது போல கேரளாவுக்கு வழங்கப்படும் 30 டிஎம்சி நீரும் கடலுக்குப் போகாது, நமக்குத்தான்கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி நடுவர் மன்றம் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்று கூறியுள்ளது. இந்தத் தண்ணீர்அத்தனையும் கடலுக்குத்தான் வீணாகப் போகப் போகிறது. மேலும், பவானிசாகர் விவசாயிகள் இனிவஞ்சிக்கப் படப் போகிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதற்கு எனது விளக்கம் இதுதான். கபினி, அமராவதி, பவானி ஆகியவை காவிரியின் உப நதிகள் ஆகும்.இவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் ஒரு பகுதி கேரளாவில் உள்ளது. குறிப்பாக பவானி ஆற்றின் நீர் வளம் 78டிஎம்சி ஆகும்.

1972ம் ஆண்டு காவிரி உண்மை நிலை அறியும் குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ள புள்ளி விவரத்தின்படி பவானிஆற்றில் கேரள மாநில பகுதியில் கிடைக்கக் கூடிய நீரின் அளவு 33 டிஎம்சி ஆகும்.

இதில் ஏற்கனவே 1.5 டிஎம்சி தண்ணீர் கேரளாவில் சிறு பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தின்படி கேரளா 2.5 டிஎம்சி தண்ணீரை பவானிஆற்றிலிருந்து அட்டப்பாடி பாசனத்திற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பவானியிலிருந்து 25.3 டிஎம்சி தண்ணீர் தங்களுக்குத் தேவை என்று கேரளா நடுவர் மன்றத்தில் வாதிட்டது.ஆனால் தமிழகம், 4.2 டிஎம்சி தண்ணீரை காவிரி உப படுகையில் கேரளம் பயன்படுத்த அனுமதிக்கலாம் எனவாதிட்டது. தற்போது நடுவர் மன்றமோ 6 டிஎம்சி தண்ணீரை கேரளாவுக்கு அனுமதித்துள்ளது.

இந்த நீரும் கூட தமிழ்நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய தண்ணீரிலிருந்து ஒதுக்கப்படவில்லை. மாறாக அதுகேரளாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 டிஎம்சியிலேயே அடங்கும்.

இதை கேரளா பயன்படுத்தவிட்டால் ஜெயலலிதா சொல்வது போல அது கடலுக்குப் போகாது. போக வாய்ப்பும்கிடையாது. ஏனென்றால் அந்த நீர் கேரளாவிலிருந்துதான் நமது மாநிலத்திற்கு ஓடி வருகிறது. எனவே கேரளாபயன்படுத்தா விட்டால் அந்த நீரும் நமக்குத்தான் வரும்.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் பிரிவு 7ல் நீர் பற்றாக்குறை காலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கும்ஒதுக்கப்பட்டுள்ள நீரின் விகிதாச்சரப்படி பகிர்ந்து அளிக்கலாம் என தெரவிக்கப்பட்டுள்ளது.

இதை செயல்படுத்த காவிரி நிர்வாக வாரியம், நீர் பங்கீடு ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைக்க நடுவர்மன்றம் வழி கண்டிருக்கிறது. வாரியத்தின் பணிகளை செயல்படுத்த நீர் பங்கீட்டு ஒழுங்குமுறை குழு

நடுவர் மன்றத்தின் ஆணையை முழுமையாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை பற்றி தமிழ்நாடு பன் மாநில நீர் தாவா சட்டத்தின் 5 பிரிவு 3ன் விதியின்படி நடுவர் மன்றத்தை அணுகி தமிழக அரசுவிளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளது.

நடுவர் மன்றத்தின் தீர்ப்பால் நமக்கு பாதகம் ஏற்படுமோ என்று சிலர் ஐயம் எழுப்பியுள்ளனர். நடுவர் மன்றம்தனது தீர்ப்பில் 50 சதவீதம் நம்பக அடிப்படையில் மொத்த நீரைக் கணக்கிட்டு இருந்தாலும், நீர் பற்றாக்குறைகாலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விகிதாச்சாரத்தின் அடிப்படையில்,பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் தண்ணீரை காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்கு முறை குழு 10 நாட்களுக்கு ஒருமுறை வரும் நீரைக் கணக்கிட்டுபகிர்ந்தளிக்கும் என்று கூறியுள்ளது. எனவே தமிழகத்திற்கு பாதகம் ஏற்படாது.

மேலும், கர்நாடகம், தமிழகத்திற்குத் தர வேண்டிய நீரை பில்லிகுண்டுவிலோ அல்லது பொதுவான எல்லைப்பகுதியில் இன்னொரு இடத்திலோ அளக்கலாம் என நடுவர் மன்றம் கூறியுள்ளது. எனவே இந்தக் கருத்தைநடுவர் மன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தும்.

இறுதித் தீர்ப்பு 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளது. இவற்றை மிகவும் கவனத்தோடு சட்ட வல்லுனர்களும், அரசுஅதிகாரிகளும் படித்து விவாதித்து வருகிறார்கள். நமக்கு பாதகமான பகுதி ஏதாவது இருந்தால், அதுகுறித்துமீண்டும் நடுவர் மன்றத்தை அணுகி தீர்வு காண தமிழக அரசு தீர்மானித்துள்ளது என்று கூறியுள்ளார்துரைமுருகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+