சென்னை-சிங்கப்பூர் விமானங்கள் இரட்டிப்பு
கொல்கத்தா:சென்னை, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவையை இரட்டிப்பாக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு பொது மேலாளர் சி.எப். ஃபூ கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், டெல்லி, சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் தற்போது இயக்கப்பட்டு வரும் விமான சேவையை அடுத்த 2ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு விரைவில் தினசரி விமான சேவைஅறிமுகப்படுத்தப்படும்.
தற்போது டெல்லி, சென்னைக்கு தினசரி ஒரு விமானம் இயக்கப்படுகிறது. பெங்களூருக்கு வாரம் 6 முறை விமான சேவை புழக்கத்தில் உள்ளது.
2009ம் ஆண்டுக்குள் சென்னைக்கும், டெல்லிக்கும் சிங்கப்பூரிலிருந்து தினசரி 2 விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில்இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே இதை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இதேபோல கொல்கத்தாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவையை தற்போதுள்ள வாரம் நான்கு முறை என்பதற்குப் பதில் தினசரிசேவையாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போது இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், அமிர்தசரஸ் ஆகிய நகரங்களில்சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சேவையைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் வாரம் 48 முறை விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது என்றார் ஃபூ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications