தீர்ப்பை நிராகரித்த கர்நாடகம்-எதிர்த்து அப்பீல்
பெங்களூர்:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்க முடியாது, அதை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விவாதிக்க பெங்களூரில் புதன்கிழமை முதல்வர் குமாரசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது.இதில் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் கன்னடக் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைக்காமல் விவாதிப்பதுசரியாக இருக்காது என்று அனைத்துக் கட்சிகளும் கூறின. இதனால் கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அடுத்த கூட்டம் எப்போதுநடக்கும் என்பது தீர்மானிக்கப்படவில்லை.
நடுவர் மன்றத் தீர்ப்பை ஏற்க முடியாது, அது நியாயமான தீர்ப்பு அல்ல. அதை எதிர்த்து அப்பீல் செய்யப்படும். 90 நாட்களுக்குள் மறு பரிசீலனைமனுவைத் தாக்கல் செய்ய முடியும். அந்தக் காலத்திற்குள் மறு பரிசீலனை மனுவை நடுவர் மன்றத்தில் கர்நாடக அரசு தாக்கல் செய்யும்.
நீர்ப்பாசனம் மற்றும் சட்ட வல்லுனர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தீர்ப்பு திருப்தி அளிப்பதாக கர்நாடகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துக்கும்,கர்நாடக அரசுக்கும் சம்பந்தம் இல்லை. அது மாநில அரசின் கருத்து அல்ல, வழக்கறிஞர்களின் கருத்து என்றார்.
பின்னர் சட்டசபையில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா பேசுகையில், இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடகத்திற்கான நீர்ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.
கர்நாடகத்தில் உள்ள 27.28 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கு 408 டிஎம்சி தண்ணீரும், குடிநீர்த் தேவைக்காக 46 டிஎம்சி தண்ணீரும்,தொழிற்சாலைகளுக்கு 4 டிஎம்சி தண்ணீரும், மின் உற்பத்திக்கு 7 டிஎம்சி தண்ணீரும் தேவை என்று கோரியிருந்தோம். ஆனால் நடுவர் மன்றத் தீர்ப்புஏமாற்றம் தருவதாக உள்ளது என்றார்.
ஆளுநரிடம் குமாரசாமி விளக்கம்:
முன்னதாக மாநில ஆளுநர் டி.என்.சதுர்வேதியை சந்தித்த முதல்வர் குமாரசாமி, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்தும், அதன் எதிரொலியாககர்நாடகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.












Click it and Unblock the Notifications