சென்னையில் பூட்டிய வீட்டில் 5 பிணங்கள்!!!
சென்னை:சென்னை திருவான்மியூரில் பூட்டிய வீட்டுக்குள் கணவன், மனைவி மற்றும் 3 மகள்கள் பிணமாக கிடந்தனர்.
திருவான்மியூர் தெற்கு மாட வீதியில் வசித்து வந்தவர் வேலாயுதம் (50). தச்சரான இவரது மனைவி ஈஸ்வரி (45), மகள்கள் கவிதா (23)விஜயலட்சுமி, சுகன்யா, ஷோபனா ஆகியோர். மகள்களில் கவிதா மட்டும் திருமணமானவர் ஆவார்.
இன்று காலை அவர்களது வீடு நீண்ட நேரமாக திறக்காத காரணத்தால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்க சென்றனர்.
வீடு பூட்டி இருந்தததால், பூட்டை உடைத்து உள்ளே பார்த்தபோது, வேலாயுதம் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது மனைவி மற்றும்விஜயலட்சுமி, சுகன்யா, ஷோபனா ஆகியோர் பிணமாக கிடந்தனர்.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஈஸ்வரியும், விஜயலட்சுமியும் விஷம் குடித்தும், சுகன்யா, ஷோபனா இருவரும் கயிற்றால் இறுக்கப்பட்டும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த வோலாயுதம் மகள்கள் இருவரையும் கழுத்தில் கயிற்றை போட்டு நெரித்துகொன்றிருக்கிறார். அதன் பின் வேலாயுதம் தூக்கு போட்டுள்ளார்.
ஈஸ்வரியம் விஜய்லட்சுமியும் விஷம் அருந்தி இறந்துள்ளனர். தனது குடும்பமே இறந்து போன செய்தி அறிந்து மூத்த மகள் கவிதா அலறியடித்தபடிஓடி வந்து விழுந்து புரண்டு மயங்கி விழுந்தது மிகப் பரிதாபமாக இருந்தது.
இரண்டாவது மகளான விஜயலட்சும் தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், இது வேலாயுதத்திற்கு பிடிக்காதகாரணத்தினால் மகளை கொன்றுவிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீடு முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் தற்கொலைக்கு முன் ஈஸ்வரி எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், நாங்கள் மிகவும் சந்தோஷமாகவாழ்ந்து வந்தோம், இப்போது சந்தோஷமாக சாகிறோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் அல்ல என எழுதியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications