மழையால் கெட்ட கொல்கத்தா கிரிக்கெட் போட்டி
கொல்கத்தா:இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கும், இந்தியாவுக்கும் இடையே நான்கு போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்றுதொடங்கியது.
முதல் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. பகலிரவுப் போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று இலங்கையை பேட்டிங் செய்யப் பணித்தது.ஜெயசூர்யவும், தரங்காவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
முதல் பந்திலிருந்தே ஜெயசூர்யா பட்டாசாக பொறிந்து தள்ளி ரன்களைக் குவித்தார். ஆட்டம் படு விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த நிலையில்,18.2 ஓவர்கள் பந்து வீசப்பட்டிருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் மழை பெய்ததால் மைதானத்தின் ஓரப் பகுதிகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்தது. தண்ணீரை உறிஞ்சுங்கள்இயந்திரங்களைக் கொண்டும், ஆட்களைக் கொண்டும் மைதானத்தில் தேங்கியிருந்த நீரை அகற்றும் முயற்சி மழை நின்ற பின்னர் தொடங்கியது.
இருப்பினும் ஆடுவதற்கேற்ற நிலைக்கு மைதானம் திரும்பவில்லை. மாலை 6. 50 மணிக்கு நடுவர்கள் ஆட்டக்களத்தையும் மைதானத்தையும் ஆய்வுசெய்தனர். பின்னர் 8.30 மணிக்கு 2வது ஆய்வு நடந்தது. அப்போது மைதானம் ஆடுவதற்கேற்ற நிலையில் இல்லை என்பதை நடுவர்கள் சைமோன்டஃப்பல், சுரேஷ் சாஸ்திரி ஆகியோர் கருதினர்.
இதையடுத்து இரு அணிகளின் கேப்டன்களுடன் நடுவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் போட்டி கைவிடப்படுவதாகஅறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
தங்களது நாயகன் கங்குலியின் ஆட்டத்தைக் காண படு ஆவலாக காத்திருந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு போட்டி பாதியில் கைவிடப்பட்டது பெரும்ஏமாற்றத்தை கொடுத்தது.
போட்டி நிறுத்தப்பட்டபோது இலங்கை அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்களை சேர்த்திருந்தது.
தரங்கா 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஜெயவர்த்தனே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரு விக்கெட்டுகளைமுனாப் பட்டேல் வீழ்த்தினார்.
பின்னர் ஆட வந்த விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா அடித்து ஆடினார். ஆனால் ஸ்ரீசாந்த் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அதேசமயம், மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரான ஜெயசூர்யா இந்தியப் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்துக் கொண்டிருந்தார்.
42 பந்துகளில் அரை சதத்தைத் தொட்ட ஜெயசூர்யா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டம் தொடர்ந்திருந்தால்ஜெயசூர்யா சதம் போட்டிருக்கக் கூடும்.
சுருக்கமான ஸ்கோர்:
இலங்கை
உபுல் தரங்கா - 14, ஜெயசூர்யா - 63 (அவுட் இல்லை), சங்கக்காரா - 12, ஜெயவர்த்தனே - 0, அட்டப்பட்டு 5 (அவுட் இல்லை).
முனாப் பட்டேல் 7 ஓவர்கள் வீசி, 25 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுக்கள்.
ஸ்ரீசாந்த் 4.2 ஓவர்கள் வீசி 36 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications