இடைத் தேர்தலுக்கு தயாராகும் மதுரை மேற்கு:சீட் வாங்க காளிமுத்து மகன் முயற்சி
சென்னை:மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சண்முகம் மரணமடைந்ததால் அங்கு மே மாதம் இடைத் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம்திட்டமிட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வென்றார் சண்முகம். ஆனால், அவரை கட்சியில் ஒதுக்கி வைத்தனர். இதையடுத்துதிமுக ஆதரவாளராக மாறினார்.
மதுரையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சண்முகம், அவரை வெகுவாக பாராட்டியதோடு அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அறிவுரைகளும் கூறினார்.
இதையடுத்து அவரிடமிருந்து ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் கட்சியை விட்டு நீக்கினால் எம்எல்ஏபதவியோடு போய் திமுகவில் இணைந்துவிடுவார் என்பதால் அவரை விட்டு வைத்திருந்தார் ஜெயலலிதா.
ஆனாலும் அதிமுகவினர் அவ்வப்போது சண்முகம் வீட்டை தாக்க முயன்றதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
ஐக்கிய பொதுவுடமைக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி சண்முகம் பின்னர் அதிமுகவுக்கு தாவியவர்.ஆனாலும் கை சுத்தமானவர், இத்தனையாண்டுகள் அரசியலில் இருந்தாலும் பதவிகள் வகித்தாலும் மதுரையில் அவருக்கு சொந்த வீடு கூடகிடையாது.
இந் நிலையில் கடந்த திங்கட்கிழமை அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் மதுரை மேற்கு சட்டசபை தொகுதி காலியாகியுள்ளது.அந்த இடத்துக்கு 6 மாதத்துக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இந் நிலையில் மாநில தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா நேற்று மதுரை சென்றார். இடைத் தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைநடத்தினர். இடைத் தேர்தலை மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே இந்தத் தொகுதியைப் பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி ஆரம்பமாகிவிட்டது. மறைந்த காளிமுத்துவின் மகன் டேவிட்அண்ணாத்துரை அதிமுகவில் தான் இருக்கிறார். அரசியலில் தனது தந்தையின் இடத்தைப் பிடிக்க ஆர்வமாக உள்ள டேவிட் இந்தத் தொகுதியில்போட்டியிட விரும்புகிறார்.
இத் தொகுதியில் கணிசமான அளவில் முக்குலத்தோர் வசிப்பதால், தன்னை ஜெயலலிதா வேட்பாளராக்குவார் என்று நம்புகிறார். இவருக்குசசிகலாவின் ஆதரவும் இருக்கும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணியைச் சேர்ந்த பாண்டியன், சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம் ஆகியோரும் இந்த இடத்தைப்பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிட்டு தோற்றது. இம் முறையும் இந்தத் தொகுதி காங்கிரசுக்கேவிட்டுத் தரப்படும் என்று தெரிகிறது. இந்தத் தொகுதியைப் பிடிக்க காங்கிரசில் சுமார் 12 பேர் வரை காய் நகர்த்தி வருகின்றனர்.
இதில் ஐஎன்டியூசி செயலாளர் கோவிந்தராஜன், பாரத் நாச்சியப்பன், மதுரை நகர் மாவட்ட அமைப்பு செயலாளர் காந்தி ஆகியோர்குறிப்பிடத்தக்கவர்கள். காங்கிரஸை பொறுத்தவரை வேட்பாளர் முடிவு செய்யப்படப் போவது தமிழகத்தில் இல்லை, டெல்லியில் தான்.
கடந்த முறை போட்டியிட்டு தோற்ற பெருமாளும் சீட் கேட்டு அலைவார் என்று தெரிகிறது. தோற்றவருக்கு சீட்டா என கதர் சட்டைகள் சர்ச்சையைகிளப்பக் கூடும்.
கடந்த தேர்தலில் மதுரைக்காரரான விஜய்காந்தின் தேமுதிக இத் தொகுதியில் படு கேவலமான தோல்வியை சந்தித்து குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் வேட்பாளர் வெறும் 422 வாக்குகளை மட்டுமே பெற்று பெரும் தோல்வியைத் தழுவினார்.
இம் முறை ஸ்ட்ராங்க் கேண்டிடேட்டைப் போட்டு விஜய்காந்தே தீவிர பிரச்சாரத்தில் இறங்கக் கூடும்.
கடந்த தேர்தலில் இத் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்:
மொத்த வாக்குகள்- 1,85,004
பதிவானவை- 1,31,030
எஸ்வி.சண்முகம் (அதிமுக)- 57,208
பெருமாள் (காங்)- 53,741
மணிமாறன் (ஐக்கிய ஐனதா தளம்)- 14,527
பகவதி (பாஜக)- 1,851
ராமகிருஷ்ணன் (சுயேச்சை)- 1,261
சரவணன் (பா.பிளாக்)- 814
கல்யாணசுந்தரம் (தேமுதிக)- 422
செந்தூர்பாண்டியன் (சுயேச்சை)- 288
பெருமாள் (சுயேச்சை)- 243
முத்துசாமி (சுயேச்சை)- 212
சாக்கனன் (சுயேச்சை)- 162
தமிழ்மாறன் (சுயேச்சை)- 158
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications