ஆபாச புத்தி கணவருக்கு மனைவி கொடுத்த ஷாக்!
சென்னை:பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவதை நிறுத்திக் கொள்ளாத கணவருக்கு, அவரது வழியிலேயே போய் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்மனைவி.
சென்னை செளகார்பேட்டையை சேர்ந்தவர் அஜய் (வயது 28). ஜவுளிகடை வைத்துள்ளார். இவருக்கு நிறைய பெண் தோழிகள் உண்டு.அவர்களுடன் மணிக்கணக்கில் போனில் பேசுவார், ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்புவார். அவர்களும் பதிலுக்கு அனுப்புவார்கள்.
இவற்றை தனது மனைவி கவிதாவிடமும் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். இது கவிதாவுக்குப் பிடிக்கவில்லை. இதை விட்டு விடுமாறு அவர் கூறியும்கேட்கவில்லை அஜய்.
இந்த நிலையில், கவிதாவின் செல்போனுக்கும் சில கிளுகிளு எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. இதை தனது கணவனிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.ஆனால் அஜய்யோ, மனைவி வேறு யாருடனோ தொடர்பு வைத்துள்ளார் என்று சந்தேகப்பட்டார்.
மனைவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். வருவதாக போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில், கவிதாவுக்கு எஸ்எம்எஸ் வரும்செல்போனின் சிம் கார்ட் தவறான முகவரி கொடுத்து வாங்கப்பட்டிருப்பது தெரிந்தது.
மேலும் தீவிரமாக விசாரித்ததில் அஜய்யின் ஜவுளிக் கடையில் வேலை செய்யும் செல்வக்குமார்தான் அந்த எஸ்.எம்.எஸ் களை அனுப்பியது தெரியவந்தது.
அவரிடம் விசாரித்தப்போது, அஜய்யின் மனைவிதான் இதுபோல எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னதாகவும், செல்போன் சிம்கார்டு வாங்கிகொடுத்ததாகவும் கூறியதை கேட்ட போலீஸாரும், அஜய்யும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கவிதாவிடம் போலீசார் விசாரித்தபோது, அஜய் பல பெண்களுடன் பேசுவதும், ஜொள்ளு விடுவதும் பிடிக்கவில்லை. அவரைத்திருத்த, முள்ளை முள்ளால் எடுப்பது போல இப்படி செய்ததாக கூறினார்.
இவர்களின் விளையாட்டால் கடுப்பான போலீஸார் இருவரையும் கடுமையாக எச்சரித்தனர். மேலும், செல்வகுமார் மீது வேலை பார்க்கும் இடத்தில்தவறாக நடந்து கொண்டதாகவும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கடைசியில் புருஷன், பொண்டாட்டி சண்டையில், அப்பாவி செல்வக்குமாரும் சிக்கி சிறைக்குப் போயுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications