ப்ரீத்தி வர்மாவுடன் ஓடிய விந்தியாவின் மேனேஜர்!
சில காலத்துக்கு முன் நடிகை விந்தியாவுடன் தனிக் குடித்தனம் நடத்திய அவரது மேனேஜர் அருண், தற்போது நடிகை ப்ரீத்தி வர்மாவைபடப்பிடிப்பிலிருந்து கூட்டிக் கொண்டு ஓடி விட்டார். இதுகுறித்து ப்ரீத்தியின் பெற்றோர் சென்னை போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
18 வயசு புயலே, திருமகன், மூன்றாம் பவுர்ணமி உள்பட பல படங்களில் நடித்து கொண்டிருப்பவர் பிரீத்தி வர்மா. கிளாமர் நடிப்பிலும், குத்துப்பாட்டுக்களிலும் புயலைக் கிளப்பி வரும் ப்ரீத்தி வர்மா, சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.தெலுங்கு படபிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த 10ம் தேதி ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு ப்ரீத்தி தனியாக சென்றார். அதன் பிறகுஅவர் திரும்பி வரவில்லை. படப் பிடிப்புக்கும் வரவில்லை.
இதையடுத்து ப்ரீத்தியை அவரது தந்தை பரத்தும், தாயார் ரம்யாவும் செல்போனில் தொடர்பு கொண்டும் எந்த பதிலும் இல்லை. இந் நிலையில்அருண் என்பவருடன் ப்ரீத்தி வர்மா கடைசியாக சென்றதாக தகவல் கிடைத்தது.
இந்த அருண் வேறு யாருமில்லை, விந்தியாவின் மேனேஜர் தான். சில வருடங்களுக்கு முன் நடிகை விந்தியா தனது வீட்டை விட்டுவெளியேறியபோது இவரது வீட்டில் தான் தங்கினார். இருவரும் சில காலம் தனியாக குடித்தனமும் நடத்தினர் (கல்யாணம் செய்துகொள்ளாமலேயே)
அருணின் வேலையை நடிகைகளை கூட்டிக் கொண்டு அரபு நாடுகளுக்குப் போய் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதுதான். நடிகைகள், துணைநடிகைகளுடன் அதிகம் புழங்குபவர் அருண்.
அருணுடன் தங்களது மகள் போனதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அருணை தொடர்பு கொண்டு தாயார் ரம்யா பேசியுள்ளார். அதற்கு அவர்,என்னுடன்தான் ப்ரீத்தி வர்மா உள்ளார். அவரை மும்பைக்கு அழைத்து வந்துள்ளேன். இனிமேல் அவர் உங்களிடம் வர மாட்டார், எவ்வளவு பணம்வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறினாராம்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த ரம்யா, உடனடியாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்துஅருணைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
அருணும், ப்ரீத்தி வர்மாவும் தற்போது ஆந்திராவில்தான் உள்ளதாக கூறப்படுகிறது. இருவரையும் பிடித்தால்தான் ப்ரீத்தியை விருப்பப்பட்டுஅருண் கூட்டிச் சென்றாரா அல்லது கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றாரா என்பது தெரிய வரும்.
அருணுடன் ஓடிப் போன விந்தியா நாளடைவில் சினிமாவில் மார்க்கெட் இழந்து கலை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆரம்பித்தார் என்பதுநினைவிருக்கலாம். இந்த நிலையில் ப்ரீத்தி வர்மாவை அருண் அழைத்துச் சென்று தனது கஸ்டடியில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதுதிரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாதத்துக்கு முன் ப்ரீத்தியை கலை நிகழ்ச்சிக்காக அழைத்துச் சென்றார் அருண். அப்போது இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகசொல்கிறார்கள்.
ஆனால், ப்ரீத்தியை அருண் கடத்திக் கொண்டு தான் போயிருக்கிறார் என பெற்றோர் கூறுகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications