தங்கம், பணத்துடன் இலங்கைத் தமிழர் கைது
சென்னை:சென்னையில் வசித்து வரும் இலங்கைத் தமிழரின் வீட்டில் தங்கக் கட்டிகள், நகை, பணத்தை போலீஸார் பறிமுதல் செய்துஅவரையும் கைது செய்தனர்.
சென்னை புறநகரான புழுதிவாக்கம் அமராவதி அவென்யூவில் வசித்து வருபவர் செல்வராஜா. 56 வயதாகும் இவர்இலங்கையைச் சேர்ந்தவர். பத்து வருடங்களாக இப்பகுதியில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டுக்கு ஏராளமான பேர் வந்து செல்வதாக அப்பகுதியினர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் செல்வராஜாவைக் கண்காணித்தனர்.
அப்போது செல்வராஜா வீட்டுக்கு இலங்கைத் தமிழர்கள் அடிக்கடி வந்து செல்வது தெரிய வந்தது. இதையடுத்துசெல்வராஜா வீட்டில் புதன்கிழமை இரவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது செல்வராஜா வீட்டில் 2 கிலோ தங்கக் கட்டிகளும், நகைகளும் இருந்தன. மேலும் ரூ. 2 லட்சத்து 60ஆயிரம் பணமும் இருந்தது. அவை குறித்து செல்வராஜாவிடம் போலீஸார் கேட்டபோது, இலங்கையில் தங்க வியாபாரம்செய்து வந்தேன். இங்கு வந்து குடியேறியபோது இவற்றையும் உடன் எடுத்து வந்தேன். பணம் நான் சம்பாதித்துசேர்த்தது என்று கூறினார்.
ஆனால் அதை ஏற்காத போலீஸார் செல்வராஜாவைக் கைது செய்தனர். செல்வராஜா, ஹவாலா தொழிலில்ஈடுபடுவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
கைது செய்யப்பட்ட செல்வராஜா பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications