விபச்சாரம்-பிரபல மாமா கன்னட பிரசாத் கைது
சென்னை:பிரபல விபச்சாரக் கும்பல் தலைவன் கன்னட பிரசாத்தை, சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையிலான போலீஸ் குழுநட்சத்திர ஹோட்டலில் வைத்து வளைத்துப் பிடித்தது.
கன்னட பிரசாத் ஒரு விபச்சார புரோக்கர். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திவருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இவர் தனது கிளையை பரப்பினார்.
பலமுறை பிடிக்க முயன்றும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி வந்தார். பெரும் அழகிகள் கூட்டத்துடன் அட்டகாசம் செய்து வந்த கன்னடபிரசாத்தை வளைத்துப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர்.
இந் நிலையில் சென்னையில் 3 நாட்களுக்கு முன்பு பிரசாத்தின் முக்கியக் கூட்டாளியான பாரதிகண்ணன் என்பவர் 3 அழகிகளுடன் போலீஸா>டம்சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் பிரசாத் குறித்த முக்கிய துப்பு போலீஸாருக்குக் கிடைத்தது.
இதையடுத்து எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது 3வது மனைவி நீத்துவுடன் தங்கியிருந்த பிரசாத்தை பிடிக்க போலீஸ் படைஅங்கு விரைந்தது. கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டே இந்தப் படைக்குத் தலைமை தாங்கி நேரடியாக வேட்டையில் குதித்தார்.
நட்சத்திர ஹோட்டலை சுற்றி வளைத்த போலீஸார் பிரசாத் எங்கும் தப்பி விட முடியாதபடி வலுவான அரண் அமைத்தனர். பின்னர் ஜாங்கிட்ஹோட்டலுக்குள் சென்று அறை அறையாக சோதனை போட்டார். இதில் பிரசாத்தும், நீத்துவும் பிடிபட்டனர்.
இருப்பினும் பிரசாத் பிடிபட்டது குறித்து போலீஸ் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் பிரசாத்பிடிபட்டது உண்மைதான் என்று காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications