காவிரி: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில்சென்னையில் நடைபெறுகிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தமிழகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள்தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளன. ஆனால் முதல்வர் கருணாநிதி, இடைக்கால தீர்ப்பில் கூறப்பட்டதை விட கூடுதல் நீரே தமிழகத்திற்குக்கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
அதேசமயம், தீர்ப்பில் உள்ள பாதகங்கள் குறித்து நடுவர் மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் பாமகஉள்ளிட்ட கட்சிகளின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். திமுக கூட்டணிக் கட்சிகள் தவிர அதிமுக,மதிமுக, பாஜக உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன.
இந்தக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து விரிவாக அலசப்படவுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், சட்ட வல்லுனர்கள் ஆகியோருடனும் தீர்ப்பு குறித்து அரசு விவாதிக்கும் என்றுதெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications