டி.டி.எச்சுக்கு மாறும் கர்நாடகத் தமிழர்கள்!
பெங்களூரு:கன்னட வெறியர்களின் செயலால் கடந்த 2 வாரங்களாக தமிழ் சேனல்களையே பார்க்க முடியாமல் உள்ளகர்நாடக தமிழர்கள் இப்போது டிடிஎச் சேவைக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.
காவிரிப் பிரச்சினை தலை தூக்கும்போதெல்லாம் கர்நாடகத்தில் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டு விடும். கன்னட வெறியர்களின் மிரட்டலால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தமிழ்தொலைக்காட்சிகளை நிறுத்தி விடுவார்கள்.
தற்போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து கர்நாடகம் முழுவதும் தமிழ்த்தொலைக்காட்சிகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் கடந்த 2 வாரமாக ஒரு தமிழ்த் தொலைக்காட்சியும்தெரியவில்லை.
இந் நிலையில், கர்நாடகத் தமிழர்கள் புத்திசாலித்தனமாக ஒரு வேலையை செய்ய ஆரம்பித்துள்ளனர்.அனைவரும் படிப்படியாக டிடிஎச் எனப்படும் டைரக்ட் டூ ஹோம் சேவைக்கு மாற ஆரம்பித்துள்ளனர்.
டிடிஎச் ஆண்டனாவை வாங்கி வீடுகளில் பொருத்தி தங்களுக்கு விருப்பமான தமிழ்ச் சானல்களை பார்க்கஆரம்பித்துள்ளனர். உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு சலுகைகளைடிடிஎச் ஆண்டெனா நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
இதைப் பயன்படுத்தி டிடிஎச் ஆண்டெனாக்களை வாங்க தமிழர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். உலகக்கோப்பைக் கி>க்கெட் தொடரை முன்னிட்டு டிடிஎச் ஆண்டெனா வாங்கினால் 6 மாதங்களுக்கு மாத வாடகைகிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி பலரும் டிடிஎச் ஆண்டெனாக்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து கேபிள் டிவிஆபரேட்டர் நஞ்சுண்ட கெளடா கூறுகையில், நாங்கள் தமிழ் சேனல்களை கொடுத்தால் உடனே கன்னடஅமைப்பினர் கேபிள்களை அறுத்து எறிந்து விடுகின்றனர். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால்தான் எங்களால் தமிழ் சேனல்களைத் தர முடியவில்லை.
இப்போது தமிழர்கள் டிடிஎச் சேவைக்கு மாற ஆரம்பித்துள்ளதால், எங்களுக்குத்தான் நஷ்டம் என்றார்கவலையுடன்.
கடந்த சில நாட்களாக டிடிஎச் ஆண்டெனாக்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழனா, கொக்கா?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications