செல் போனால் வந்த பூசல்: பெண் உயிர் ஊசல்
காஞ்சிபுரம்:செல் போன் வாங்கியதற்கு கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால் கோபமடைந்த பெண், தீக்குளித்துத் தற்கொலைக்குமுயன்று உயிருக்குப் போராடி வருகிறார். காப்பாற்ற முயன்ற கணவரும் தீயில் கருகி ஆபத்தான நிலையில்சிகிச்சை பெற்று வருகிறார்.
பெரிய காஞ்சிபுரம் சேலைராமசாமி தெருவில் வசித்து வருபவர் கேசவன் (45). ரைஸ்மில் உரிமையாளர்ஆவார். இவரது மனைவி ராணி (40).
ராணி, தனது கணவருக்குத் தெரியாமல் ஒரு செல் போன் வாங்கியுள்ளார். இரவு வீடு திரும்பிய கேசவன்,மனைவியிடம் இருந்த புதிய செல்போனைப் பார்த்து ஏது இது என்று கேட்டுள்ளார்.
புதிதாக வாங்கியதாக ராணி கூறவே கோபமடைந்தார் கேசவன். இப்போது செல்போன் வாங்க வேண்டியஅவசியம் என்ன வந்தது என்று கேட்டு சண்டை போட்டுள்ளார். கணவனும், மனைவியும் காரசாரமாக பேசிக்கொண்டனர்.
செல் போன் வாங்கியதை கணவர் கண்டித்ததால் கோபம் கொண்டார் ராணி. ஆத்திரத்தில் சமையல் அறையில்இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் மீது ஊற்றிக் கொண்டு தீவைத்தார்.
தீயின் வெப்பம் தாளாமல் அவர் போட்ட அலறலால் பயந்து ஓடி வந்த கேசவன், தீயில் கருகிக் கொண்டிருந்தராணியைக் காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பிடித்துக் கொண்டது.
பின்னர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், கணவன், மனைவியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications