காவிரி: திமுக, அதிமுக மீது பாமக தாக்குதல்
சென்னை:காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோட்டை விட்டு விட்டன என்று பாமக தலைவர்ஜி.கே.மணி குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் நடுவர் மன்றத் தீர்ப்பில் உள்ள பாதகமான அம்சங்களை நீக்கக் கோரி மறு ஆய்வு மனு செய்ய தீர்மானிக்கப்பட்டு தீர்மானம்ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த பாமக தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், காவிரிப் பிரச்சினையைப் பொருத்தவரை, திமுக,அதிமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுமே தமிழகத்தின் உரிமையை கோட்டை விட்டு விட்டன.
இடைக்காலத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துமாறு கடந்த 16 வருடமாக பாமகதான் போராடிக் கொண்டிருந்தது. ஆனால் திமுக, அதிமுக,காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதை நிறைவேற்ற சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
நமது உரிமையை விட்டுத் தரக் கூடாது. போராடிப் பெற வேண்டும். நாம் திராவிடர்கள் என்று பெருமையாக கூறிக் கொண்டிருப்பதால் எந்தப்பயனும் இல்லை. கன்னடத்துக்காரனும் திராவிடன்தான், ஆனால் நம்மை எட்டி உதைக்கிறான். இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.
தமிழகம் முழுவதும் பந்த் நடத்த வேண்டும். இதற்கு முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுக்க வேண்டும். கர்நாடகத்தில் தமிழர்கள் அதிகம் உள்ளபகுதிகளுக்கு மத்திய படைகளை அனுப்பி தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நிர்வாக வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் கமிட்டி ஆகியவற்றை சேலம் அல்லது மேட்டூரில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார் மணி.
நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின, தீர்மானமும் ஒரு மனதாகநிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications