இட ஒதுக்கீடு-க்ரீமி லேயர் நீக்கப்படுமா?
டெல்லி:மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கான இட ஒதுக்கீடுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளவழக்கு மீதான விசாரணை மார்ச் 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கவகைசெய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்து சட்டமாக்கப்பட்டது. அரசுகெஜட்டிலும் இது வெளியிடப்பட்டது.
இந் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி, அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக டாக்டர்கள் சங்கம்,சமத்துவத்துக்கான இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பல இயக்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.
இந்த மனுக்களில், இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பாக, இதன் சாதக, பாதகங்களை மத்திய அரசு ஆராய தவறிவிட்டது.
உயர்கல்வி நிறுவனங்களில் திறமை அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் மட்டுமே சிறந்த தொழில்நுட்ப கல்வி அறிவு கொண்டமாணவர்களை உருவாக்க முடியும்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து மத்திய அரசினால்நியமிக்கப்பட்ட மேற்பார்வை குழு சரியாக ஆராயவில்லை.
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த இட ஒதுக்கீடு சட்டத்தால் பிற்படுத்தப்பட்டோ>ல் வசதிபடைத்தவர்கள் பயன் அடைய வாய்ப்பு உள்ளது.
இந்த இட ஓதுக்கீட்டை அனுபவிக்க பொருளாதாரரீதியாக வசதி குறைந்த மாணவர்களை இனம் காண வேண்டும். அதற்காக இந்த இடஒதுக்கீட்டை வரும் கல்வி ஆண்டில் நிறைவேற்ற நிறைவேற்ற இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்த மனுவுக்கு மத்திய அரசு பதில் மனு தாக்கத் செய்தது. அதில் ஜாதி அடிப்படையிலான இடஓதுக்கீடுசரியானது தான் என்று கூறப்பட்டுள்ளது.
இம்மனுக்கள், நீதிபதிகள் அரிஜித் பசாயத், லோகேஷ்வர்சிங் பண்டா ஆகியோர் முன் நிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதுமனுக்கள் அனைத்தும் மார்ச் 7ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
இடஒதுக்கீட்டு சலுகையில் இருந்து வசதி படைத்தவர்களை (க்ரீமி லேயர்) நீக்குவது குறித்தும் உச்சநீதிமன்றம் பரிசீலிக்கும் என்றும் நீதிபதிகள்கூறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications