யுஏஇ-தடுமாற வைக்கும் காஸ்ட் ஆப் லிவிங்
துபாய்:ஐக்கிய அரபு எமிரேட்டில் நாளுக்கு நாள் வாழிடச் செலவுகள் அதிகரித்து வருவதால், அதிக சம்பளம் வாங்கியும் பயன் இல்லை என்றஅலுப்புணர்வு அங்கு வேலை பார்ப்போரிடம் நிலவ ஆரம்பித்துள்ளது.
வளைகுடா ஒருங்கிணைப்பு கவுன்சிலின், மனித ஆற்றல் குறித்த ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டில் காஸ்ட் ஆப் லிவிங் 28 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் ஊதிய உயர்வு 15 சதவீதமாகத்தான் உள்ளது.
இதுகுறித்து வேலை வாய்ப்பு மார்க்கெட் ஆய்வாளர் யோகவ் சிராஜ் கூறுகையில், நாளுக்கு நாள் வாங்கும் சம்பளத்தை விட தேவைப்படும்செலவுகளின் தொகை அதிகமாகி வருகிறது. சம்பளத்தை விட காஸ்ட் ஆப் லிவிங் 13 சதவீதம் அதிகமாக உள்ளது.
இதனால் ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை பார்ப்போ>டம் அதிருப்தியும், ஏமாற்றமும் நிலவுகிறது என்றார்.
மொத்தம் 20 நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. குவைத், கத்தாரில் உள்ளதொழலாளர்களுக்கு கடந்த ஆண்டு 17 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
அதே சமயம் செளதியில் 12 சதவீத ஊதிய உயர்வே அளிக்கப்பட்டது. ஆனால் இங்கு காஸ்டட் ஆப் லிவிங் குறைவாகவே உள்ளது. வளைகுடாநாடுகளிலேயே செளதியில்தான் குறைந்த ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
ஆனால், ஊதிய உயர்வு அதிகமாக இருந்தாலும் கூட ஐக்கிய அரபு எமிரேட்டில் அது குறைந்த அளவிலான பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினை காரணமாக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டினரில் 10 சதவீதம் பேர் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பவிரும்புகின்றனர். 16 சதவீதம் பேர் வேறு நாட்டுக்கு இடம் பெயருவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் சாதாரண வேலை பார்க்கும் தொழிலாளர்கள்தான் தங்களது நிறுவனங்களுக்கு விசுவசமாக இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம், இவர்கள்தான் மிகக் குறைந்த அளவிலான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டவர்களாவும்இருக்கிறார்கள்.
தொழில்துறையில், வங்கி மற்றும் நிதித்துறையில்தான் ஊதியம் ஓரளவு சிறப்பாக உள்ளது. இங்கு கடந்த 12 மாதங்களில் 19.5 சதவீத ஊதியஉயர்வு தரப்பட்டுள்ளது. அடுத்த இடத்தை தகவல் தொழில்நுட்பத் துறை (18.01) பெறுகிறது. சட்டம் மற்றும் மருத்துவ சேவைப் பிரிவில் முறையே10.91, 11.12 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
துபாய்-இந்தியர் முகாமில் பரவும் அம்மை:
இந் நிலையில் துபாயில் உள்ள தொழிலாளர் முகாமில் தங்கியிருந்த 23 வயது இந்தியர் அம்மை தாக்கி இறந்தார். இதனால் முகாமில் சுகாதாரவசதிகள் இல்லாததை கண்டித்து பிற தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துபாயில், ஜெபல் அலி முகாம் என்ற இடத்தில் ஏராளமான இந்தியத் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் தங்கியிருந்த 23வயதாகும் தொழிலாளர் ஒருவர் அம்மை தாக்கி இறந்தார். மேலும் 24 பேருக்கு அம்மை தாக்கியுள்ளது.
இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது. முகாமில் அடிப்படை சுகாதாரமே இல்லை என்று கூறி தொழிலாளர்கள் அனைவரும்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து தொழிலாளர் நலத்துறை தலையிட்டு முகாம் நிலைமையை சரி செய்ய வேண்டும் என இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும், முகாம்களில் சுகாகார நிலையைமேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், 24 மணி நேர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என சம்பந்தப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள்பணியாற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications