சென்னை-டெல்லி ஏசி ஏழைகள் ரதம் கிளம்பியது
சென்னை:சென்னையிலிருந்து டெல்லிக்கு குளிர் சாதன வசதி கொண்ட ஏழைகள் ரதம் என்ற ரயிலை முதல்வர் கருணாநிதி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
முழுக்க குளு குளு வசதியுடன் கொண்ட இந்த ரயிலின் கட்டணம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் 3வது வகுப்பு குளிர்சாதன கட்டணத்தை விட 39சதவீதம் குறைவாகவும், ராஜ்தானி ரயில் கட்டணத்தை விட 44 சதவீதம் குறைவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும். மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இந்த ரயிலில் 12 குளிர்சாதன3வது வகுப்பு பெட்டிகளும், 4 குளிர்சாதன வசதி இருக்கை பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயிலை இன்று முதல்வர் கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே இணைமைச்சர் வேலு,அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பரிதி இளம்வழுதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில்,
ரதம் எப்போதும் மெதுவாகத்தான் செல்லும். வேகமாகச் செல்லாது. அதை விளக்குவதற்காகத் தான் எங்கே ரதம் என்றதும் மெதுவாகத்தான்செல்லும் போலும் என்று நீங்கள் கருதி விடக் கூடாது என்பதறாக நம்முடைய வேலுவும், பொது மேலாளரும் கெட்டிக்காரத்தனமாக அதி வேகவிரைவு ரயில் என்று குறிப்பிட்டார்கள்.
வேகம் என்றாலே விரைவு தான், அதோடு விரைவு என்பதையும் சேர்த்து அதிவேக விரைவு என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் நீங்கள்விரைவிலே போய் சேர வேண்டிய இடத்திற்கு சேரலாம் என்ற நம்பிக்கையை இந்த அடை மொழிகள் மூலமாக அவர்கள் தந்திருக்கிறார்கள்.
கிராமப் புறத்தில் இருக்கின்ற மக்களுக்கு ரயிலே தெரியாத ஒரு நிலை கூட இந்ததது. ரயிலையே பார்க்காத மக்கள் எல்லாம் கூட இருந்தார்கள்.ரயில்லே பார்ப்பதறக்காகவே நாங்கள் எங்கள் ஊர் திருக்குவளையில் இருந்து ரயில் நிலையத்திற்கு ரயில் வருகின்ற நேரம் தெரிந்து கொண்டு ஏழுமைல் நடந்து வந்து திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்திற்கு வருவோம்.
அப்போது ரயில் வரும் போது கன்னத்திலே கைகளால் போட்டுக் கொண்டு ஏதோ ஒரு தெய்வம் வருவதைப் போல வணங்கியவர்கள் அன்றைக்குஇருந்தார்கள். ஆனால் இன்று ரயில் மிகமிக சாதாரண போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக அடிக்கடி பயன்படுத்தக்கூடிய ஒன்றாகிவிட்டது.
இன்றைக்கு 10 ஆயிரம் மைல் பறந்து செல்ல விமானத்தில் ஏறினால் 10 மணி நேரத்தில், 12 மணி நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியும்என்கிற அளவிற்கு பயண வசதிகள் பெருகி இருக்கின்ற நிலையை நாம் காண்கிறோம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வேலு இங்கே ஒரு பட்டியலையே படித்து காட்டினார். எவவளவு ரயில்கள், எவ்வளவு ரயில் பாதைகள் புதிதாகஅமைக்கப்பட்டிருக்கின்றன. எத்தனை பாதைகள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. எத்தனை பாதைகள் அகலப்படுத்தப்பட்டிருக்கின்றன. எத்தனைபுதிய பாதைகள் போடப்படவிருக்கின்றன என்பதை எல்லாம் இங்கே எடுத்து கூறினார்.
இவ்வளவு முயற்சிகளும் இன்றைக்கு தமிழகத்திலே வெற்றிகரமாக நடைபெற்றிருக்கின்றன என்றால், அதற்கு நாம் பாராட்டிட வேண்டிய ஒருவர்,நம்முடைய அருமை மத்திய இணை அமைச்சர் வேலு தான் என்பதை நான் இங்கே சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.
அவரை நான் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக, என் சார்பாக பாராட்டி நன்றி கூறி வாழ்த்துகின்றேன். அவருடைய முயற்சிகள் மேலும் மேலும்வளரவும், மக்களுடைய போக்குவரத்து தேவைகள் இன்னும் சீராகவும் நாம் அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களை கூறி உங்களுடைய இனியவாழ்த்துக்களோடு இந்த அதிவேக விரைவு ரயிலை தொடங்கி வைக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications