புலிகளின் படகு குண்டு வைத்து அழிப்பு
சென்னை:கோடியக்கரை அருகே பிடிபட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்த படகை, கடலோரக் காவல் படையும், தமிழகபோலீஸாரும் இன்று குண்டு வைத்துத் தகர்த்தனர்.
இதுகுறித்து தமிழக டிஜிபி முகர்ஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிப்ரவரி 13ம் தேதி நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே விடுதலைப்புலிகளின், கடல் புலிகள் பிரிவுக்குச் சொந்தமான படகு பிடிபட்டது.
இந்தப் படகை கடலோரக் காவல் படையின் ரமாதேவி ரோந்துக் கப்பல் வளைத்துப் பிடித்து பறிமுதல் செய்தது. இந்தப் படகில் ரிமோட்கண்ட்ரோல் மூலமாக வெடிக்கச் செய்யக் கூடிய வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்துபடகு தீவிரமாக பரிசோதிக்கப்பட்டது.
அப்போது படகில் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்தப் படகை கடலில் வைத்து அழிக்கசென்னை நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடலோரக் காவல் படையின் அவ்வையார் என்று பெயரிடப்பட்ட கப்பல், விடுதலைப் புலிகளின் படகை, சென்னைகடற்கரையிலிருந்து 20 கடல் மைல் தொலைவுக்கு கடலுக்குள் கொண்டு சென்றது.
அங்கு வைத்து காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில புலனாய்வு அதிகாரிகளின் மேற்பார்வையில் அந்தப் படகு வெடிகுண்டு வைத்துத்தகர்க்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தகர்க்கப்பட்ட கடல் புலிகள் படகு, இரணைத் தீவிலிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள இன்னொரு பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்தியக்கடலோரக் காவல் படையிடம் பிடிபட்டது. அதில் இருந்த 2 விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
படகிலிருந்து மனித வெடிகுண்டு ஜாக்கெட் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், வெடிபொருட்களை கடலோரக் காவல் படையினர் பறிமுதல்செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.
கடலோர பகுதியில் சோதனை:
இதற்கிடையே இலங்கைக்கு வெடி பொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடல் பகுதியில்ஹெலிகாப்டர் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் காலை, மாலை இரு முறை மட்டுமே ஹெலிகாப்டர் ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
நேற்று முதல் ஒரு நாளைக்கு 11 முறை ஹெலிகாப்டர் கடற்கரை பகுதிகளில் தாழ்வாக பறந்து சென்று கண்காணிக்க ஆரம்பித்துள்ளது. இது தவிரதரையிலும், தண்ணீரிலும் செல்லக்கூடிய ஹோவர் கிராப்ட் என்ற நவீன கப்பலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கடலோர காவல் படையுடன் ராமநாதபுரம் மாவட்ட போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளில்போலீசார் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு நவீன ஆயுதங்களும், வயர்லெஸ் கருவிகளும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடலோர பகுதிகளுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் சீல் வைக்கப்பட்டு அங்கும் சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் தேவிப்பட்டிணம், வாலிநோக்கம், திருப்புல்லாணி, தொண்டி, மாரியூர், உப்பிலான் ஆகிய கடலோர கிராமங்களில் உளவுப் பிரிவுபோலீசாரும், கடலோர காவல்படையின் உளவு பிரிவு அமைப்பினரும் மாறு வேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனவர்பகுதியில் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications