சந்தேக மாப்பிள்ளையை நிராகரித்த மணப்பெண்
சென்னை:கல்யாணத்திற்கு முன்பே நடத்தையில் சந்தேகப்பட்ட மணமகனை, தாலி கட்டிக் கொண்ட அடுத்த நிமிடமே தாலியை கழற்றி எறிந்து புறக்கணித்துவிட்டுச் சென்றார் மணமகள்.
சென்னை வளசரவாக்கம் வெங்கட சுப்பிரணி நகரைச் சேர்ந்த மணிகண்டனுக்கும், ஆழ்வார் திருநகரைச் சேர்நத வள்ளிமயிலுக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டது.
![]() |
திருமணத்தையொட்டி கல்யாண மண்டபத்தில் அனைவரும் கூடியிருந்தனர். இரவு மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. அப்போது மண்டபத்திற்குவந்திருந்த ஒருவருடன் வள்ளிமயில் பேசியுள்ளார். இதைப் பார்த்த வெங்கடசுப்ரமணி, வள்ளியின் நடத்தை குறித்து சந்தேகமடைந்தார்.
இது வள்ளியின் காதுக்குச் சென்றது. தாலி கட்டுவதற்கு முன்பே இப்படி சந்தேகப்படுபவர் நாளை எப்படியெல்லாம் சநதேகப்படுவாரோ என்றுநினைத்தார் அவர். என்ன செய்வது என்ற குழம்பிய நிலையிலேயே மணவறையில் அமர்ந்தார். கலயாணமும் நடந்து முடிந்தது.
அக்னி வலம் வருமாறு அய்யர் கூறவே, வெங்கடசுப்ரமணியின் கையைப் பிடித்தபடி வலம் வந்தார் வள்ளி. அப்போது திடீரென கோபமடைந்தவள்ளி, கையை உதறி விட்டு தாலியைக் கழற்றி வீசினார். மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறிய அவர் அங்கிருந்து வெளியேறி விட்டார்.
வள்ளியின் செயல் அங்கு கூடியிருந்தவர்களை பெரும் அதிர்சசியில் ஆழ்த்தியது. ஏன் வள்ளி இப்படிச் செய்தார் என்று விசாரித்தபோதுகல்யாணத்தில் ஏற்கனவே வள்ளிக்கு இஷ்டம இல்லையாம். இருந்தாலும் பெற்றோர் வற்புறுத்தலால்தான் அவர் கல்யாணத்துக்குச் சம்மதித்துள்ளார்.
இந்த நிலையில், வெங்கடசுப்ரமணி சந்தேகப்படவே, அதை காரணமாக வைத்து அவர் தாலி கட்டிய அடுத்த நிமிடமே மணமகனை துறந்து விட்டுவெளியேறி விட்டார்.
ஆனால் தனது மகளுக்கு மன நலம் சரியில்லை என்று வள்ளியின் தாயார் புஷ்பம் கூறியுள்ளார். காரணம் பல கூறப்பட்டாலும், வள்ளியின் செயல்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications