முதலிரவு அறையில் மணப்பெண் மர்ம மரணம்!
சென்னை:சென்னை ஹோட்டலில் முதலிரவின்போது மணமகள் திடீரென மர்மமான முறையில் இறந்தார்.
பெங்களூரைச் சேர்ந்த விபின் தாஸ் ஷா என்பவரின் மகள் மைனா (23). சி.ஏ. பட்டதாரியான அவருக்கும் சென்னை தம்புச் செட்டித் தெருவைச்சேர்ந்த ரோஹித் என்பவருக்கும் சூளைமேடு பகுதியில் திருமண மண்டபத்தில் கடந்த 22ம் தேதி திருமணம் நடந்தது.
![]() |
இதையடுத்து எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால், முதலிரவு முடிந்து அடுத்த நாள் காலை மணமகள் மைனா வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோஹித், உடனடியாக தனது பெற்றோருக்கும், மைனாவின் குடும்பத்தாருக்கும் தகவல் கொடுத்தார்.
அவர்கள் பறந்தோடி வந்தனர். அப்பல்லோ மருத்துவமனைக்கு மைனாவைக் கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் மைனாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனை நடத்த அனுப்பிவைத்தனர்.
மைனாவுக்கு அவ்வப்போது மூச்சுத் திணறல், நெஞ்சு வலி வருமாம். இதனால் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். மதலிரவின்போது எந்தப்பிரச்சினையும் வந்து விடக் கூடாது என்பதற்காக அதிக அளவிலான மாத்திரைகளை அவர் சாப்பிட்டிருக்கக் கூடும். அதனால்தான் இறந்திருக்கவேண்டும் என மைனாவின் தந்தை விபின்தாஸ் ஷா கூறியுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக மணமகன் வீட்டார் மீது அவர் போலீஸிலும் புகார் கொடுக்கவில்லை.
திருமணமான அடுத்த நாளே மணமகள் இறந்ததால், இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications