குவோத்ரோச்சி-நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது
டெல்லி:அர்ஜென்டினாவில் கைதான போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றவாளி குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கைஎடுக்காததைக் கண்டித்து இன்றும் பாஜக கூட்டணி நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டது. இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நேற்று இதே காரணத்திற்காக ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய விடாமல் பாஜக கூட்டணி அமளியில் ஈடுபட்டது. இந் நிலையில் இன்றுமக்களவை தொடங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு குவாத்ரோச்சி குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் பாஜக எம்பிக்கள்அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
ஊழல் குற்றவாளியான குவாத்ரோச்சி விவகாரத்துக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என அவர்கோஷமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் குரல் தந்ததால் பெரும் அமளி நிலவியது. இதையடுத்து இன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அதே போல் குவோத்ரோச்சி விவகாரத்தில் பிரதமர் பதவி விலகக் கோரி மாநிலங்களவை பாஜக கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.இதனால் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.
போபர்ஸ் விவகாரத்தில் இன்டர்போலிடம் சிபிஐ வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தான் அவரை அர்ஜென்டினா போலீசார் கைது செய்தனர்.ஆனால், அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் முன்பே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications